Advertisment

கோலி- அனுஷ்கா பற்றி கவாஸ்கர் கமென்ட்: வெடித்த சர்ச்சை

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது வர்ணனையில், விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

author-image
WebDesk
Sep 25, 2020 23:41 IST
New Update
Virat Kohli Sunil Gavaskar, Gavaskar, Sunil Gavaskar on Kohli, Gavaskar comment on Virat Kohli anushkar, Gavaskar commentary, Sunil Gavaskar controversy comment

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது தனது வர்ணனையில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisment

கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது தனது வர்ணனையில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்காக சர்ச்சையில் சிக்கியுள்ளார். “இது 2020-லும் இன்னும் எனக்கு மாற்றமில்லை. நான் கிரிக்கெட்டில் இழுத்துச் செல்லப்படுவதை எப்போது நிறுத்துவேன்? நான் பெரிய அறிக்கைகளை விட்டு நிறுத்துவேனா? ” என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் வர்ணனை செய்துகொண்டிருந்த கவாஸ்கர், அனுஷ்கா சர்மா தனது கணவர் விராட் கோலிக்கு பந்து வீசிய வீடியோவைக் குறிப்பிட்டு, “சமீபத்தில் பொதுமுடக்கத்தின்போது அவர் அனுஷ்காவின் பந்துவீச்சுக்கு மட்டுமே பயிற்சி செய்த ஒரு வீடியோவைப் நான் பார்த்தேன். ஆனால், அது போதுமானதாக இருக்காது” என்று கூறினார்.

கோஹ்லி ரசிகர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வைரலான ஒரு வீடியோவை கவாஸ்கர் குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோவில், முதலில் கோலி அவரது மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு பந்து வீசுகிறார். பின்னர், அனுஷ்கா சர்மா கோலிக்கு பந்து வீசுகிறார்.

இருப்பினும், கவாஸ்கரின் கருத்து கோலியின் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் அவரை வர்ணனைக் குழுவிலிருந்து நீக்குமாறு பி.சி.சி.ஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

publive-image

கவாஸ்கரின் கருத்துக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்த அனுஷ்கா சர்மா, “கவாஸ்கர் உங்கள் கருத்து வெறுக்கத்தக்கது என்பது உண்மை. கணவரின் விளையாட்டுக்காக மனைவி மீது குற்றம் சாட்டுகிற இத்தகைய கடுமையான கருத்தை நீங்கள் தெரிவிக்க நினைத்தது ஏன்? இதைப் பற்றி நான் விளக்க விரும்புகிறேன். விளையாட்டில் கருத்து தெரிவிக்கும்போது, ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் மதிக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

கவாஸ்கரின் கருத்துக்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (கே.எக்ஸ்.ஐ.பி) இடையேயான ஐ.பி.எல் போட்டியின் போது தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் கோலி கிக்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுலுடைய கேட்ச்சை இரண்டு முறை தவறவிட்டார். முதலில் கே.எல்.ராகுல் 83 ரன் எடுத்திருந்தபோது 17வது ஓவரில் டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்த பந்தை பிடிக்காமல் தவறவிட்டார். மீண்டும் கே.எல்.ராகுல் 89 ரன் எடுத்திருந்தபோது, 18வது ஓவரில் அடித்த பந்தை இரண்டாவது முறையாக கோஹ்லி பிடிக்க முடியாமல் தவறவிட்டார். இந்தப் போட்டியில், கோலி இரண்டு முறை கேட்ச் செய்யாமல் தவறவிட்டதால், ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிய கே.எல்.ராகுல் 69 பந்துகளில் 132 ரன் எடுத்தார். இதன் மூலம், ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் ஆகும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
#Virat Kohli #Anushka Sharma #Ipl #Sunil Gavaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment