/indian-express-tamil/media/media_files/fl7NctwWeKqNsAEMmCN9.jpg)
டி20 உலகக்கோப்பை தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Sunil Gavaskar | T20 World Cup 2024: 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் வருகிற ஜூன் 2 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்காக தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டியானது வருகிற ஜூன் 5 ஆம் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் எவை என்பது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அரையிறுதிக்கு முன்னேறும் 4 அணிகள் எவை என்பது குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் பேசுகையில், "என்னைப்பொறுத்தவரை டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிக்கு முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் தான் முன்னேறும்." என்று கூறினார்.
முன்னாள் வீரர்களின் டி-20 உலகக் கோப்பை 2024 அரைஇறுதித் தேர்வு பட்டியல் பின்வருமாறு:-
அம்பதி ராயுடு: இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா
பிரையன் லாரா: இந்தியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான்
பால் காலிங்வுட்: இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இந்தியா
சுனில் கவாஸ்கர்: இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்
கிறிஸ் மோரிஸ்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா
மேத்யூ ஹைடன்: ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா
ஆரோன் பின்ச்: இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ்
முகமது கைஃப்: இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து
டாம் மூடி: ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து
எஸ். ஸ்ரீசாந்த்: இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து.
#TeamIndia have made it to everyone's Top 4! 🤌🏻💙
— Star Sports (@StarSportsIndia) May 28, 2024
From World Cup winners to those who have aced the game, our experts @SunilGavaskar, @AaronFinch5 , #PaulCollingwood, @haydostweets, @RayuduAmbati , and more have picked their TOP 4 for the ICC Men's T20 World Cup 2024!
Which… pic.twitter.com/oaxLkltB1T
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.