சுனில் ஜோஷி எனும் பெயரை 20k கிட்ஸ் அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், இயர்லியர் 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் ஹீரோவாக வலம் வந்த ஸ்லோ இடது கை ஸ்பின்னர் இவர்.
Advertisment
செப்.26, 1999ல் இவர் தனது பந்துவீச்சில் நிகழ்த்திய சாதனை இன்றளவும் முறியடிக்கப்படாமல் உள்ளது என்பதை அறிவீர்களா?
1999ல் எல்ஜி கோப்பைத் தொடரில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, கென்யா, ஜிம்பாப்வே ஆகிய நான்கு அணிகள் மோதின. இதில், நைரோபியில் அந்த தேதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கியது இந்தியா. டாஸ் வென்ற தென்.ஆ., கேப்டன் குரோனே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்படியும் 270 ரன்களுக்கு மேல் அடித்து இந்தியாவுக்கு டஃப் கொடுக்கலாம் என்றிருந்த அவரது கனவை புல்டோசர் ஏற்றி சுனில் ஜோஷி எப்படி கலைத்தார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.
10 ஓவர்கள் வீசிய ஜோஷி, 6 மெய்டன்களுடன் 6 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஐந்து முக்கிய தலைகளை சாய்த்தார்.
கிப்ஸ், டிப்பனர், குரோனே, பவுச்சர், பொல்லாக் என தென்னாப்பிரிக்க பேட்டிங்கை ஒட்டுமொத்தமாக குலைக்க, 48 ஓவரில் 117 ரன்களில் சரண்டரானது அந்த அணி. தொடர்ந்து சேஸிங் செய்த இந்தியா, 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து எட்டு விக்கெட்டுகள் வித்தியாத்தில் பெரும் வெற்றிப் பெற்றது.
அப்போதெல்லாம், இந்தியாவின் இதுபோன்ற பெர்ஃபாமன்ஸ் எல்லாம் அரிது. இன்றளவும், குறைந்த ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய சுனில் ஜோஷியின் இச்சாதனை முறியடிக்கப்படவில்லை.