எம்.எஸ். தோனியின் தீவிர ரசிகர் ஒருவர, நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை ஊக்குவிக்கும் நோக்கில், தனது வீட்டை தோனியின் ரசிகர்கள் இல்லமாக மாற்றியுள்ளார்.
பெயர்- கோபி கிருஷ்ணன்(30). கடந்த 12 ஆண்டுகளாக துபாயில் அந்நிய செலாவணி வர்த்தகராக பணிபுரிந்து வந்த இவர், கடந்த மாதம் கடலூர் மாவட்டம் அரங்கூரில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார்.
வாழ்கையில், தனது முன்மாதிரியாக எடுத்துக் கொண்ட எம்.எஸ். தோனிக்கு ஆதரவைக் காட்டும் வகையில், தனது முழு வீட்டையும் மஞ்சள் நிறத்தில் வண்ணமயமாக்கியுள்ளார்.

“நான் இதை மிக நீண்ட காலமாக செய்ய விரும்பினேன். இந்த சீசனில் சி.எஸ்.கே அணியின் ஆட்டம் சிறப்பானதாக இல்லை. இது மிகவும், எதிர்மறை தாக்கத்தை உருவாக்கியது. தல தோனி மற்றும் சி. எஸ். கே அணியை தேவையில்லாமல் மக்கள் ட்ரோல் செய்தனர். இதை, என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனது நண்பர்கள் சிலர் கூட, தோனியின் திறனைக் கேள்விக்குள்ளாக்கத் தொடங்கினர். வாழ்கையின் ஒரு பகுதிதான் வெற்றி/ தோல்வி. சில மோசமான ஆட்டங்கள் காரணமாக ஒரு நபரை நாம் விமர்சிக்கக்கூடாது. எனவே, எனது வீட்டை சிஎஸ்கே- யின் நிறமான மஞ்சள் நிறத்தில் வரைய முடிவு செய்தேன். தல எப்போதும் எனக்கு தல தான், என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியுள்ளேன். இந்த, இடத்தை சிஎஸ்கே ரசிகர்களின் இல்லமாக மாற்ற வேண்டும். குடும்பத்தினர், எனக்கு உண்மையில் ஆதரவளித்தனர். விரும்பியதைச் செய் என்று அப்பா தெரிவித்தார். மஞ்சள் நிறத்தில் வீட்டை வண்ணமயமாக்க 1.5 லட்சம் வரை செலவு செய்தேன்,” என்று கோபி கிருஷ்ணன் தெரிவித்தார்.
கோபி கிருஷ்ணனின் இந்த முயற்சி தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. “கடந்த மூன்று நாட்களில் மட்டும் குறைந்தது 500 பேர் இந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். செல்பி எடுத்துக் கொண்டு மகிழ்கின்றனர். வீட்டின் நுழைவாயிலில் இருக்கும் தோனியின் பெரிய உருவத்தைப் பார்த்து பூரிக்கின்றன்ர். நான் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தல தோனி, எங்கள் வாழ்கையில் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பதை அனைவரும் உணர வேண்டும்,”என்று அவர் கூறினார்.
பொன். செல்வராசு : அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கோபி கிருஷ்ணன் வீட்டில் தோனியின் உருவம், சிஎஸ்கே லோகோ போன்றவற்றை வரைய பெரிதும் உதவி புரிந்தார்.
“ஐபிஎல் நிர்வாகம், ஐபிஎல் போட்டிகளில்ரசிகர்களுக்கு அனுமதியளித்திருந்தால், தாயகத்திற்கு திரும்பாமல், துபாயில் தங்கி அனைத்து சிஎஸ்கே போட்டிகளையும் பார்த்திருப்பேன். சிஎஸ்கேவின் எந்தவொரு ஆட்டத்தையும் நான் என்றும் தவறவிட்டதில்லை. அவர்கள் ஐபிஎல் சாம்பியன்கள். இந்த, சீசனிலும் அவர்கள் கோப்பையை கைப்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். தல தோனி மீண்டும் கோப்பையை உயர்த்துவார்,” என்று கோபிகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil