Advertisment

ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு: தோனி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Supreme Court order MS Dhoni on retired IPS officer G Sampath Kumar case Tamil News

உச்சநீதிமன்றம் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கும் தடை விதித்துள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

MS Dhoni | Supreme Court: இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற கேப்டன்களுள் முக்கியமானவராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என ஐ.சி.சி நடத்திய அனைத்து வடிவ போட்டிகளிலும் கோப்பைகளை வென்று சாதனையை படைத்துள்ளது.

Advertisment

இதேபோல், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளது. தற்போது 42 வயதான தோனி இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த சீசன் தான் அவரது கடைசி சீசனாக இருக்கும் என ரசிகர்கள் பரபரப்பாக பேசியும் வருகிறார்கள். 

இந்நிலையில், எம்.எஸ். தோனி தொடர்ந்த வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுள்ள உச்சநீதிமன்றம் மேல்முறையீட்டு மனு தொடர்பாக தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 

தோனி போட்ட வழக்கு 

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகக் கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளைப் பதிவு செய்து இந்த பதில் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த பதில் மனுக்களில் உள்ள தகவல்கள் நீதிமன்றத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

உத்தரவு 

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவமதிப்பு செய்துள்ளதாகக் கூறி, அவருக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அப்போது தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதால் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று சம்பத்குமார் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள், தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.

பின்னர் சம்பத் குமார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனு தொடர்பாக எம்.எஸ். தோனி பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் சம்பத் குமாருக்கு விதிக்கப்பட்ட 15 நாட்கள் சிறை தண்டனைக்கும் தடை விதித்துள்ளனர். இந்த வழக்கின் மறு விசாரணை மார்ச் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ms Dhoni Supreme Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment