ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்… எப்போது மீண்டும் விளையாட வருவார்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுக்கே 2 ஆண்டுகள் தான் தண்டனை ஆனால் ஸ்ரீசாந்த்திற்கு மட்டும் தான் வாழ்நாள் தடை என்பது மிகவும் நியாயமற்றது.

Supreme Court sets aside life ban on Cricketer Sreesanth
Supreme Court sets aside life ban on Cricketer Sreesanth

Supreme Court sets aside life ban on Cricketer Sreesanth : 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் ஃபிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த விளையாட்டு வீரர்களான ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சாவன் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதை டெல்லி காவல்த்துறையினர் கணடறிந்தனர்.

குற்றம் சுமத்தப்பட்ட மூன்று விளையாட்டு வீரர்களுக்கும் கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை விதித்து உத்தரவிட்டது கிரிக்கெட் வாரியம். ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாட்டினை விசாரணை செய்து வந்தது கேரள உயர் நீதிமன்றம். பின்பு அவர் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தது.

Supreme Court sets aside life ban on Cricketer Sreesanth

ஆனால் பி.சி.சி.ஐ இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இன்று இந்த வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்டிருந்த வாழ்நாள் தடையை நீக்கி அறிவித்துள்ளதால், எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவது குறித்து பி.சி.சி.ஐ முடிவெடுக்கலாம் என்று அறிவித்துள்ளது.

ஸ்ரீசாந்த் வழக்கறிஞரின் வாதம்

இந்த முடிவினை மூன்று மாதங்களுக்குள் எடுக்க வேண்டும் என்று காலக்கெடுவினையும் அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.  ஸ்ரீசாந்த் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சல்மான் குர்ஷித் “ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை மிகவும் வருத்தத்திற்கு உரியது. கடந்த ஐந்தாறு வருடங்களில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். பி.சி.சி.ஐக்கு மிகவும் விஸ்வாசமாக இருந்தார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மே 2013ம் ஆண்டு மொஹாலியில் பஞ்சாப் 11 கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடும் போது சூதாட்டம் நடைபெற்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளர்களுக்கே 2 ஆண்டுகள் தான் தண்டனை ஆனால் ஸ்ரீசாந்த்திற்கு மட்டும் தான் வாழ்நாள் தடை என்பது மிகவும் நியாயமற்றது என்று வாதிட்டார்.

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Supreme court sets aside life ban on cricketer sreesanth

Next Story
கெத்து காட்ட போவது தோனியா? கோலியா? 23 ஆம் தேதிக்கு தயாராகும் ஐபிஎல் ரசிகர்கள்!ipl tickets,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com