இலங்கை வீரர் சூரஜ் ரந்தீவ் இந்திய அதிரடி வீரரான சேவாக்கிற்கு வேண்டுமென்றே நோ-பால் வீசிய சம்பவத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார்.
Suraj Randiv - MS Dhoni Tamil News: இலங்கை கிரிக்கெட் அணியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் அறிமுகமானவர் ஹேவா கலுஹலமுல்லகே சூரஜ் ரந்தீவ் கலுஹலமுல்ல (முகமது மர்ஷுக் முகமது சூரஜ்). அந்த அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளில் 1613 ரன்கள் மற்றும் 43 விக்கெட்டுகளையும், 36 ஒருநாள் போட்டிகளில் 1214 ரன்கள் மற்றும் 36 விக்கெட்டுகளையும், 7 டி20 போட்டிகளில் 139 ரன்கள் மற்றும் 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் ரந்தீவ்.
Advertisment
ஐபிஎல் தொடருக்கான எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த 2011ல் இணைந்த அவர், 2 சீசன்களில் விளையாடிய 8 ஆட்டங்களில் 174 ரன்கள் மற்றும் 6 விக்கெட்டுகளை 7 என்ற எகானமி ரேட்டுடன் எடுத்தார்.
பஸ் ஓட்டும் இலங்கை வீரர்
Advertisment
Advertisements
இந்நிலையில், சூரஜ் ரந்தீவ் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் பேருந்து ஓட்டி வாழ்க்கை நடத்தி கொண்டிருக்கிறார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு கிரிக்கெட் லீக்குகளை விளையாடிய அவர் தனது வாழ்க்கையை மாற்றிக்கொண்டு கிரிக்கெட் உலகிற்கு வெளியே ஒரு புதிய பயணத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார். ஆரம்பத்தில், ரந்தீவின் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் திட்டம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அவர் டான்டெனாங் கிரிக்கெட் கிளப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட அளவில் விளையாடினார்.
டிசம்பர் 2020ல், ரந்தீவ், ஆஸ்திரேலிய அணியிடமிருந்து கிரிக்கெட் வீரர்களுக்கு நெட் பவுலராக பணியாற்றுவதற்கான அழைப்பைப் பெற்றுள்ளார். மேலும் பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு ஆஸ்திரேலிய அணி தயாராகவும் உதவியிருக்கிறார்.
நோ-பால்
ரந்தீவ் இந்திய அதிரடி வீரரான சேவாக்கிற்கு வேண்டுமென்றே நோ-பால் வீசிய சம்பவத்தின் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறார். இந்தியா - இலங்கை அணிகள் மோதிய ஒருநாள் தொடரின் போது, சேவாக் 99 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, 38 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரந்தீவ் வேண்டுமென்றே நோ-பால் வீசினார். அதனால், சேவாக் தனது ஒருநாள் சதத்தை தவறவிட்டிருந்தார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.
6yrs ago on this day,Hewa Kaluhalamullage Suraj Randiv Kaluhalamulla did this,was hit fr a 6,but I remained 99notout pic.twitter.com/iwhOFdtQNL
இலங்கை கிரிக்கெட் ரந்தீவை ஒரு போட்டிக்கு இடைநீக்கம் செய்ததுடன், பந்துவீசும்போது வேண்டுமென்றே மீறியதற்காக சேவாக்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. இதன்பின்னர், 2011 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் ரந்தீவ் இடம் பெறவில்லை. ஆனால் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டார்.
இப்போது, அவர் தனது கிரிக்கெட் சர்ச்சைகள் மற்றும் ஆட்டத்தில் இருந்து வெகு தொலைவில் ஒரு பஸ் டிரைவராக மெல்போர்ன் தெருக்களை சுற்றி வருகிறார். 'ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரை இப்படியொரு நிலையில் பார்ப்பது மிகவும் பரிதமான ஒன்று' என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil