Advertisment

'தல' அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த 'சின்ன தல'

எம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
Aug 15, 2020 21:33 IST
New Update
'தல' அறிவித்த அதே நாளில் ஓய்வை அறிவித்த 'சின்ன தல'

எம்.எஸ் தோனியை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெயினா தெரிவித்துள்ளார்.

Advertisment

சுரேஷ் ரெயினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "  உங்களுடன் இணைந்து விளையாடின நேரங்கள் மிகவும் அழகானவை. பெருமிதத்துடன், இந்த பயணத்தில் உங்களுடன் சேர்ந்து பயணிக்கும் முடிவை நான் தேர்வு செய்கிறேன். நன்றி இந்தியா. ஜெய் ஹிந்த், ”என்று பதிவிட்டார்.

13வது ஐ.பி.எல்., சீசன், வரும் செப். 19 முதல் நவ. 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடக்கிறது. இதற்கு தயாராகும் விதமாக சென்னை அணியின் 6 நாள் பயிற்சி முகாம் இன்று முதல்  சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்காக,  தோனியும், சுரேஷ் ரெயினாவும் கடந்த வாரம் சென்னை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முன்னதாக, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி தனது இன்ஸ்டாகிராம்  கணக்கில் பதிவிட்டார் அறிவித்தார். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, சுரேஷ் ரெயினா தனது ஓய்வை அறிவித்தார்.

226 ஒருநாள் போட்டிகளில்  கலந்து கொண்ட சுரேஷ் ரெயினா  5615 ரன்களை குவித்துள்ளார். இந்தியாவுக்காக 78 டி 20 போட்டிகளில் விளையாடிதன் மூலம் 1605 ரன்களையும் பெற்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

#Mahendra Singh Dhoni #Suresh Raina
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment