ஐபிஎல்-இல் இருந்து வெளியேறியது குறித்து ரெய்னா பதில்

ஐபிஎல் போட்டிகள் தொடங்குதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறியது தனது முடிவு தனிப்பட்ட விஷயம் என்றும், அணியுடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Suresh Raina, Suresh Raina IPL exit reason, Suresh Raina family, சுரேஷ் ரெய்னா, ஐபிஎல், ஐபிஎல் போட்டியில் இருந்து வெளியேறிய ரெய்னா, Suresh Raina IPL 2020,Chennai Super Kings,சிஎஸ்கே, CSK, IPL 2020, Indian Premier League

ஐபிஎல் போட்டிகள் தொடங்குதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறியது தனது முடிவு தனிப்பட்ட விஷயம் என்றும், அணியுடன் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். மேலும், என் சீனிவாசனின் கருத்துக்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று சுரேஷ் ரெய்னா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

கிரிக்பஸ்ஸ் விளையாட்டு செய்தி ஊடகத்துக்கு ரெய்ன அளித்த நேர்காணலில் அவருடைய இந்த திடீர் முடிவுக்கு தூண்டியது எது என்பதை தெரிவிக்கவில்லை.

ரெய்னா அளித்துள்ள நேர்காணலில், “இது ஒரு தனிப்பட்ட முடிவு. நான் என் குடும்பத்திற்காக திரும்பி வர வேண்டியிருந்தது. உடனடியாக வீட்டின் முன்பு இருந்து சில விஷயங்களை பேச வேண்டியிருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர் வீரரான ரெய்னா, துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்தபின், அவர் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்தபோதும் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், ரசிகர்கள் தன்னை மீண்டும் பயிற்சி முகாமில் பார்க்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

என் சீனிவாசன் சமீபத்தில் தெரிவித்த கருத்துகள் பற்றி பேசிய ரெய்னா, அணி உரிமையாளரின் அறிக்கைகள் ஒரு தந்தை மகனை திட்டுகிறார் என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் ரெய்னா கூறுகையில், “அவர் எனக்கு ஒரு தந்தை போன்றவர். அவர் எப்போதும் எனக்கு ஆதரவாக இருக்கிறார். என் மனதிற்கு நெருக்கமானவர். அவர் என்னை தனது இளைய மகனைப் போலவே நடத்துகிறார். மேலும், அவர் கூறியதை ஒரு தந்தை தனது மகனை திட்டுவது என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனபதில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ரெய்னா அணியில் இருந்து வெளியேறியது குறித்த உண்மையான காரணம் சீனிவாசனுக்கு தெரியாது என்றும் பின்னர் அவர் தனக்கு ஒரு செய்தி அனுப்பியதாகவும் ரெய்னா தெரிவித்துளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suresh raina on ipl exit something needed to be addressed immediately

Next Story
’அடுத்தாண்டு சி.எஸ்.கே-வுக்காக ரெய்னா விளையாடுவாரா?’ சீனிவாசன் பதில்Suresh Raina Exit
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com