Advertisment

பேட் பிடித்த கையில் Pan-ஐ பிடிக்கும் ரெய்னா… நெதர்லாந்தில் 'இந்திய உணவகம்'!

'ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா.

author-image
WebDesk
New Update
Suresh Raina Opens indian Restaurant In Amsterdam

சமைப்பதில் எப்போதும் ஆர்வம் கொண்ட கிரிக்கெட் வீரர் ரெய்னா நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் 'இந்திய உணவகத்தை நிறுவியுள்ளார்.

Suresh Raina Restaurant In Amsterdam Tamil News: கிரிக்கெட் நட்சத்திரமான சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் கடந்த 2005ம் ஆண்டில் அறிமுகமானார். அதிரடி வீரராக அறியப்படும் ரெய்னா 3 ஃபார்மெட்டுகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணிக்காக 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர் 7,988 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 176 போட்டிகளில் விளையாடி 4,687 ரன்கள் குவித்துள்ளார்.

Advertisment

கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வை அறிவித்த இவர் ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார். எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி 5ல் 4 முறை அந்த அணி சாம்பியன் பட்டத்தை வாகை சூடியபோது முக்கிய வீரராக ரெய்னா இருந்தார். 2021 சீசனுக்குப் பிறகு ரெய்னா சென்னை அணியில் இடம் பிடிக்கவில்லை. தற்போது அவர் இந்தியா லெஜண்ட்ஸ், டெக்கான் கிளாடியேட்டர்ஸ் போன்ற ஓய்வு பெற்ற வீரர்கள் விளையாடும் தொடரில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், 'ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் நிறுவியுள்ளார் சுரேஷ் ரெய்னா. இது குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

publive-image

அந்த பதிவில் ரெய்னா “ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. உணவு மற்றும் சமையலில் எனது ஆர்வம் என்ன என்பது குறித்து முக்கிய இடத்தை இது பெறுகிறது. உணவின் மீது எனக்குள்ள பிரியத்தை நீங்கள் அறிவீர்கள்.

இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் உணவு முறையை ஐரோப்பாவின் இதய பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன். நிச்சயம் இங்கு ருசியான உணவு கிடைக்கும். வெகு விரைவில் இதன் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த சாகசப் பயணத்தில் என்னுடன் இணைந்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Chennai Super Kings Sports Cricket Indian Cricket Team Indian Cricket Netharlands Suresh Raina
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment