ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். சொந்த காரணங்களால் ரெய்னா நாடு திரும்பியுள்ளதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் kanakkதெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பஞ்சாப் பதான்கோட் மாவட்டத்தில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் சுரேஷ் ரெய்னாவின் மாமா உயிரிழந்ததாகவும், நான்கு பேர் படுகாயமடைந்தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 19, 20 ஆகிய தேதிகளில் பதான்கோட்டில் உள்ள தரியால் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில், அரசு ஒப்பந்ததாரக உள்ள, சுரேஷ் ரெயினாவின் மாமா அசோக் குமார் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
மூன்று முதல் நான்கு பேர் கொண்ட கொள்ளை கும்பல் இந்த சதிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேக்கிறது. சுரேஷ் ரெயினாவின் அத்தை மற்றும் குடும்பத்தினர் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த வேளையில், மர்ம ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டியதாகவும், பின்பு ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகவும் காவல்துறை தெரிவிக்கிறது.
மறைந்த அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி, மனைவி ஆஷா தேவி (ரெயினா அத்தை), மகன்கள் அபின், குஷால் ஆகியயோர் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆஷா தேவி தர்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே, சுரேஷ் ரெய்னாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் ஆதரவாக இருக்கும் என்று அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil