Advertisment

டெஸ்ட் அணியில் சூரியகுமார்: ரஞ்சிப் போட்டியில் சாதித்த சர்ஃப்ராஸ் கானுக்கு ஏன் இடம் இல்லை?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சர்ஃபராஸ் கான் இடம் பெறாததது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Suryakumar ahead of Sarfaraz Khan, IND VS AUS test squad, fans reaction

India's Test squad for Australia series; Suryakumar Yadav selected ahead of Sarfaraz Khan tamil news

Suryakumar Yadav and Sarfaraz Khan Tamil News: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு (பிசிசிஐ) சொந்த மண்ணில் அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணிகளை நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

Advertisment

இதில் குறிப்பிடும்படியான தேர்வாக பிரித்வி ஷா நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான பட்டியலில் இடம்பிடித்து இருந்தது. அவர் சமீபத்தில் ரஞ்சி கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முச்சதம் விளாசி இருந்தார். சுமார் 18 மாதங்களுக்குப் (537 நாட்களுக்குப் பிறகு) இந்திய அணிக்கு மீண்டும் வரவிருக்கும் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

இதற்கிடையில், பிசிசிஐ சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கு அவர்களின் முதல் டெஸ்ட் அழைப்பை வழங்கியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த தொடரில் சூரியா டெஸ்ட் அணியில் மாற்றாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடக்க டெஸ்ட் அணியில் இடம்பிடித்தது இதுவே முதல் முறை.

publive-image

இருப்பினும், நாக்பூர் (பிப்ரவரி 9-13) மற்றும் டெல்லியில் (பிப்ரவரி 17-21) ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சர்ஃபராஸ் கான் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 25 வயதான அவர் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியில் மும்பைக்காக ஐந்து ஆட்டங்களில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 431 ரன்களை எடுத்துள்ளார்.

இதேபோல், கடந்த சீசனில், 6 ஆட்டங்களில் 4 சதங்கள் உட்பட 122.75 சராசரியில் 982 ரன்கள் எடுத்தார். அவரது ஃபார்மைக் கருத்தில் கொண்டு சூர்யகுமார் அல்லது கிஷனுக்குப் பதிலாக, அவரை தேர்வு செய்திருக்கலாம் என்று பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ரிஷப் பண்ட்டிற்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தை கருத்தில் கொண்டு கே.எஸ்.பாரத்திற்கு பேக்அப் கீப்பராக இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஏனென்றால், அவர் அந்த இடத்தில் கடந்த ஆறு மாதங்களாக விளையாடவில்லை.

publive-image

இருப்பினும், சர்ஃபராஸை விட சூர்யகுமாரை விரும்புவதற்கான முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, கேப்டன் ரோகித் சர்மா உட்பட இந்திய அணி நிர்வாகம், அணிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​வீரர்களை எல்லா ஃபார்மெட்டுகளிலும் மிக்ஸ் செய்யக் கூடாது என்று கூறிய நிலையில், மீண்டும் இப்படி தேர்வு செய்துள்ளது.

“டெஸ்டில் சர்பராஸ் கானை விட சூரியகுமார் யாதவை தேர்வு செய்தது ரஞ்சி கோப்பைக்கு அவமானம். அந்த பையன் முதல் தர கிரிக்கெட்டில் மிகவும் நிலையான ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக இருந்துள்ளார் மற்றும் யாரையும் விட அந்த அழைப்புக்கு தகுதியானவரும் அவரே.

இந்த கமிட்டியின் தேர்வு குழப்பம், மீண்டும் தொடர்கிறது." என்று ரசிகை ஒருவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

"இஷான் கிஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் அணியில் உள்ளனர். ரஞ்சி போட்டியில் விளையாடியதன் மதிப்பு குறையத் தொடங்கி விட்டன. மேலும் பொதுக் கருத்துக்கள் அதிக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன.

இஷான் தேர்வு செய்யப்பட்டது புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால் சூரியகுமார் தேர்வு குழப்பமாக உள்ளது. இது சர்ஃபராஸ் மற்றும் ஹனுமா போன்றவர்களுக்கு நல்ல சிக்னலை அனுப்பாது" என்று மற்றொரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.

பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, "முதல் வகுப்பு கிரிக்கெட்டில் கதவை உடைத்த சர்பராஸ் கானுக்கு மிகவும் கடினமாகது. அவரை விட உங்களால் அதிகம் செய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

ரோகித் சர்மா டெஸ்ட் அணிக்கு கேப்டனாகவும், கேஎல் ராகுல் துணை கேப்டனாகவும் செயல்படுவர். அணியில் விராட் கோலி, சேதேஷ்வர் புஜாரா மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்ற மூத்த வீரர்கள் உள்ளனர். முகமது ஷமி வேகப் பந்துவீச்சு வரிசையை வழிநடத்துவார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சி புஜாரா, வி கோஹ்லி, எஸ் ஐயர், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஆர் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Cricket Indian Cricket Team Suryakumar Yadav Prithvi Shaw
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment