News about T20I, Cricketer and Suryakumar Yadav in tamil: 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் தட்டி சென்றார். இந்த இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான், இங்கிலாந்தின் சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா ஆகிய வீரர்கள் இருந்த நிலையில், அவர்களையெல்லாம் முறியடித்து முன்னேறியுள்ளார் சூரியகுமார். கடந்த 2021-ம் ஆண்டில் 31 போட்டிகளில் விளையாடிய அவர் 1164 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவரது சராசரி 46.56 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 187.43 ஆகவும் உள்ளது.
Advertisment
32 வயதான சூரியகுமார் ஒரு ஆண்டில் 20 ஓவர் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார். அதே நேரத்தில், முகமது ரிஸ்வான் ஒரு வருடத்தில் 1000 ரன்களை கடந்த உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்று இருக்கிறார். மேலும், சூரியகுமார் இந்த ஆண்டில் மொத்தமாக 68 சிக்ஸர்களை பறக்கவிட்டார். அதன்மூலம், டி20 வரலாற்றில் ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரரானார்.
கடந்த ஆண்டு சிக்கந்தர் ராசாவும் நல்ல ஃபார்மில் இருந்தார். ராசா 24 20 ஓவர் போட்டிகளில் 753 ரன்கள் குவித்ததோடு 25 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். சிறந்த ஆல்ரவுண்டராகவும் இருந்தார். இங்கிலாந்தின் சாம் கரன் கடந்த ஆண்டு 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் நல்ல பேட்டிங் செய்தார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் ஐசிசி நடத்திய டி20 உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.