/indian-express-tamil/media/media_files/4L9lTvxBLIuKIn5n7Qb2.jpg)
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் அடித்த பந்து உடைத்த கேமராவின் விலை தான், இருப்பதிலேயே அதிகமாம்.
Suryakumar Yadav | Mumbai Indians | IPL 2024:17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடியுள்ள 8 போட்டிகளில் 3ல் வெற்றி, 5ல் தோல்வி என 6 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
இத்தொடரில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கும் 43-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அடுத்த சுற்றான பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியமாகும். இதனையடுத்து, மும்பை அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் வலைப் பயிற்சியின் போது பல்வேறு வகையான கேமராக்களை உடைத்துள்ளனர். அவர்கள் இதுவரை உடைத்த கேமராக்களின் மொத்த மதிப்பு ரூ.40 ஆயிரம் இருக்கும் என்றும் மும்பை அணி அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி அதன் சமூக வலைதள பக்கமான எக்ஸ் தளத்தில் இந்த ரீல்ஸ் வீடியோவை படம் பிடிக்க தங்களுக்கு ரூ. 40 ஆயிரம் செலவாகியதாக (This reel cost us 40k to make... 😰) கேப்சனில் போட்டுள்ளது. அந்த வீடியோவில், மும்பை வீரர்கள் டிம் டேவிட் மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற அணியின் முன்னணி ஹிட்டர்கள் தங்கள் பயிற்சியின் போது பிட்ச் கேமராக்களில் பந்தை அடித்ததைக் காட்டப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் அடித்த பந்து உடைத்த கேமராவின் விலை தான், இருப்பதிலேயே அதிகம். அந்த கேமராவின் விலை ரூ. 37, 300 என்று காட்டப்படுகிறது. தற்போது இந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
This reel cost us 40k to make... 😰#MumbaiMeriJaan#MumbaiIndianspic.twitter.com/ISqo0Ax4tW
— Mumbai Indians (@mipaltan) April 26, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.