New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/kohli-reaction.jpg)
விராட் கோஹ்லி ரியாக்ஷன்
விராட் கோஹ்லி ரியாக்ஷன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் ஒரு ரன் கூட எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆனதைப் பார்த்து ஷாக் ஆன விராட் கோலியின் ரியாக்ஷன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இந்த போட்டியில் இந்திய அணி படுதொல்வி அடைந்தது.
அதிலும், இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ், கடந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனதைப் போல, இந்த போட்டியிலும் ரன் எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் அளித்தார்.
Suryakumar Yadav gets out for 0.
— Sahil Grover (@cricloversahil) March 19, 2023
⏩ For cricket related updates, FOLLOW- @cricscientist#SuryakumarYadav#INDvsAUS pic.twitter.com/sx9R659H8J
சூரியகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் 2-வது போட்டியிலும் கோல்டன் டக் அவுட் ஆனதை களத்தில் இருந்த விராட் கோலி ஷாக் ஆகி கொடுத்த ரியாக்ஷன் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
32 வயதான வலது கை பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவை ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் ஸ்டார்க் கோல்டன் டக் அவுட் செய்து அவரை பெவிலினுக்கு அனுப்பினார். மும்பையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது நடந்ததைப் போலவே சூரியகுமார் யாதவ் ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் இந்திய அணியை கவலையடையச் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்தடுத்து இரண்டு போட்டிகளிலும் ரன் எடுக்காமல் அவுட் ஆகி கோல்டன் டக் அவுட் ஆகியிருக்கிறார். இது ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.