Advertisment

டி20 கிரிக்கெட்: டீமை ஜெயிக்க வைக்கிறதுல கோலி, ரோஹித்தை விட 'ஸ்கை' ரொம்ப டாப்; புள்ளி விவரம் சொல்லுது!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20-யில் 83 ரன்கள் எடுத்து சூர்யகுமார் யாதவ் 12வது ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Suryakumar Yadav Rohit Sharma and Virat Kohli IND Vs WI 2023 Tamil News

160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி சூர்யகுமார் யாதவின் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

Suryakumar YadavTamil News: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடைபெறுகிறது.

Advertisment

இந்நிலையில், முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா 2-வது ஆட்டத்திலும் இதே போல நெருங்கி வந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் பணிந்தது. இதனால் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2- 0 என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்து ஆடிய இந்தியா சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 17.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 164 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

வெளுத்து வாங்கிய 'ஸ்கை'

இந்த ஆட்டத்தில் 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - கில் ஜோடி களமிறங்கினர். இதில், ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், கில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். ஒவ்வொரு ஓவருக்கும் ஸ்கூப் ஷாட், ராம்ப் ஷாட் என்று பந்துகள் பவுண்டரியை எல்லையில் பறந்துகொண்டே இருந்தது.

அவர் 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், தனது அதிரடியை விடாமல் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியான நிலையில், சூர்யகுமார் யாதவ் 44 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்த சூர்யகுமார் யாதவிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

புள்ளி விவரம்

டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக சூர்யகுமார் யாதவ் பெறும் 12வது ஆட்டநாயகன் விருது இதுவாகும். மொத்தமாக 51 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12 முறை ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். இதுவரை, 148 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 11 ஆட்டநாயகன் விருதையும், 115 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 15 ஆட்டநாயகன் விருதையும் வென்றுள்ளனர். தற்போது 12வது ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வென்றதன் மூலம் ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்துள்ளார். இதேபோல் விராட் கோலியின் சாதனையை முறியடிக்க இன்னும் 3 ஆட்டநாயகன் விருதை சூர்யகுமார் யாதவ் வெல்ல வேண்டும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Rohit Sharma Sports India Vs West Indies Virat Kohli Suryakumar Yadav Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment