Advertisment

ரோகித் கேப்டன் பதவி நீக்கம்: இதயம் நொறுங்கிய எமோஜி... வைரலாகும் மும்பை வீரர் சூர்யகுமாரின் எக்ஸ் பதிவு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவின் எக்ஸ் வலைதள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Suryakumar Yadav shares cryptic post following Rohit Sharma removal as MI captain Tamil News

மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Suryakumar-yadav | rohit-sharma | mumbai-indians | ipl-2024: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

ஹர்திக் பாண்டியா முந்தை 2 சீசனிகளில் குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் ரூ.15 கோடிக்கு வாங்கியது. அப்போது இருந்தே ரோகித் சர்மாவின் இடத்தை பிடிப்பார் ஹர்திக் என்று ரசிகர்கள் பரபரப்பாக பேசி வந்தனர். இதனை உறுதி செய்யும் வகையில், நேற்றைய அறிவிப்பு இருந்தது. 

ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை அணியின் வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா, கேப்டன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதை அவர்களால் ஏற்க முடியவில்லை. 

இந்த அறிவிப்புக்குப் பிறகு இன்று மும்பை இந்தியன்ஸ் அணி அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுமார் 1.5 லட்சம் பின்தொடர்பவர்களை இழந்துள்ளது. மேலும், சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர் சூர்யகுமார் யாதவ், இன்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் 'உடைந்த இதயம்' போன்ற எமோஜியை பதிவிட்டிருந்த நிலையில், இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், சூர்யகுமார் யாதவ் இப்படி காரணம் என்ன? அவருக்கு என்ன ஆச்சு? அவருக்கு ஏன் இந்த கவலை? என்று பதிவிட்டு வருகிறார்கள். சிலர் ரோகித் சர்மா நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அவர் அப்படி பதிவிட்டிருக்கலாம் என்றும் கமெண்ட் செய்து வருகிறார்கள். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rohit Sharma Mumbai Indians Suryakumar Yadav IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment