India-vs-australia | suryakumar-yadav: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.
சூர்யகுமார் அதிர்ச்சி
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிற்கு இரண்டு பத்திரிக்கையாளர்கள் மட்டும் வந்ததை பார்த்து சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியடைந்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கணுக்கால் காயத்தால் அவதிப்படுவதால் அவருக்கு பதிலாக உலகின் 'நம்பர் ஒன்' டி20 பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் கலந்துகொண்டார். அந்த சந்திப்புக்கு 2 பத்திரிக்கையாளர்கள் மட்டும் வந்ததை கண்ட சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சிக்கு உள்ளனார்.
அப்போது சூர்யகுமார் "இரண்டு பேர் மட்டுமா?" என்று கேள்வி எழுப்பி அதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இரண்டு பத்திரிகையாளர்களும் சூர்யகுமாரிடம் பல திருப்பங்களுடன் கேள்வி எழுப்பினர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளது.
அதில் பேசிய கேப்டன் சூர்யகுமார் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் டி20 உலகக் கோப்பையை ஓட்டி தொடரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். "மதியம் அவர்களைச் சந்தித்தபோது நான் அவர்களிடம் சொன்னது என்னவென்றால், நாம் களத்தில் இறங்கும்போது மிகவும் தன்னலமற்றவர்களாக இருப்போம் என்று நான் நினைக்கிறேன். நான் அணி இலக்குகளை விட தனிப்பட்ட மைல்கற்களைப் பற்றி அதிகம் சிந்திக்காத ஒரு பையன். அதனால், நான் அவர்களிடம் அப்படி சொன்னேன்.
அணியின் நலன்களை முதலில் வைத்துக் கொள்ளுங்கள், அதன் பிறகு எது வந்தாலும், அவர்கள் முடிவை எடுக்கலாம். ஐ.பி.எல் மற்றும் சில இந்தியப் போட்டிகளின் போது நான் அவர்களுடன் நிறைய முறை விளையாடியிருக்கிறேன். நான் எப்படி செயல்படுகிறேன் என்பது அவர்களுக்குத் தெரியும், அது அவ்வளவு கடினமாக இல்லை. என் எண்ணங்களைத் தெரிவித்தேன். தொடர் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்" என்று சூர்யகுமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.