IND vs NZ 1st T20 Tamil News: இந்திய மண்ணில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பெற்றது
இந்தியா அபாரம்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். எனவே முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்தது.
நியூசிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்து வலுவான ரன்களை சேர்த்த தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் அதிகபட்சமாக 42 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து 165 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய இந்திய அணி சிறப்பாக விளையாடியது. அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைபட்டது போது, நியூசிலாந்தின் டேரில் மிட்செல் வீசிய கடைசி ஓவரில் முதல் 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்த இந்திய அணி வெற்றியை உறுதி செய்தது. இதனால் 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது .
We are off to a winning start! 👏 👏
The @ImRo45-led #TeamIndia seal a 5⃣-wicket victory in first @Paytm #INDvNZ T20I in Jaipur. 👍 👍
Scorecard ▶️ https://t.co/5lDM57TI6f pic.twitter.com/KXu28GDn3m— BCCI (@BCCI) November 17, 2021
இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 62 ரன்களும் ,கேப்டன் ரோகித் சர்மா 36 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தற்போது 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.
A korero after T20I 1 in Jaipur. #INDvNZ pic.twitter.com/oL5rqAbdJy
— BLACKCAPS (@BLACKCAPS) November 17, 2021
Handshakes after a tight one in Jaipur. #INDvNZ pic.twitter.com/6WEWueEBFP
— BLACKCAPS (@BLACKCAPS) November 17, 2021
சூர்யகுமார் அதிரடி…
நேற்றைய ஆட்டத்தில் கேஎல் ராகுல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் - கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சூர்யகுமார் யாதவ் - கேப்டன் ரோகித் சர்மா ஜோடி (69 ரன்கள்) அணிக்கு நல்ல அடித்தளமிட்டதோடு ரன் ரேட் உயரவும் வழிவகை செய்தது.
இதில் அதிரடி காட்டிய சூர்யகுமார் அரைசதம் கடந்து அசத்தினார். அதோடு 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என தான் சந்தித்த பந்துகளை மைதானத்தின் மூலைமுடுக்கிற்கெல்லாம் விரட்டி 40 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இர்பான் பதான் பாராட்டு
இந்நிலையில், இளம் வீரர் சூர்யகுமாரின் அதிரடியான பேட்டிங்கை முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் வெகுவாக பாராட்டி இருக்கிறார். அவரிடம் 2022 டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய பேட்டிங் வரிசையில் சூர்யகுமார் முக்கிய நபராக இருப்பாரா என்று கேட்டதற்கு, "அந்த தொடருக்கு இன்னும் வெகு நாட்கள் உள்ளன. அதற்கு இந்தியா இன்னும் பல ஆட்டங்களில் விளையாட வேண்டும். ஆனால் சூர்யகுமாரை பொறுத்தவரை எதிர்காலத்திற்கான நல்ல அறிகுறிகளைக் கொண்ட வீரராக இருக்கிறார்." என்றார்
தொடர்ந்து அவர் பேசுகையில், "நடப்பு டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் சூர்யகுமார் ஃபார்மில் இல்லை. எனவே அந்த வாய்ப்பை அவரால் கச்சிதமாக பயன்படுத்த முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாகவே இருக்கிறார். அவர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார். மேலும் ஐபிஎல் போட்டியிலும் அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன் என்பதை நாம் அறிவோம்.
இந்திய அணியில் 360 டிகிரி வீரரைப் பற்றி பேசினால், அந்த கேள்விக்கான பதில் சூர்யகுமார் என்றுதான் நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் எல்லா திசைகளிலும் விளையாட முயற்சிக்கிறார். மேலும் அவர் எல்லா திசைகளையும் கவர்ந்திழுக்கும் திறன் கொண்டவராகவும் இருக்கிறார். அவர் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடுகிறார் மற்றும் வேகப்பந்து வீச்சை அவரால் சமாளிக்க முடிகிறது. நேற்றைய ஆட்டத்தில் போல அவர் தனது திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்." என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.