Advertisment

'வேற லெவல் பேட்டிங்': கோலியின் புகழ்ச்சியை நினைவுகூர்ந்த சூர்யகுமார் பேட்டி

'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' உடனான உரையாடலில், கடந்த ஆறு மாதங்களாக விளையாடி வரும் கிரிக்கெட் பாணி குறித்தும், சில ஷாட்களை பற்றியும் ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.

author-image
WebDesk
New Update
Suryakumar Yadav’s latest interview In tamil

India's Suryakumar Yadav celebrates after scoring a century . (AP)

SURYAKUMAR Yadav’s latest interview In tamil: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு இவரின் சமீபத்திய பேட்டிங் உள்ளது. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி ஆகியோர் டாப் ஆடரிலும், ஹர்திக் பாண்டியா ஃபினிஷராகவும் உள்ள நிலையில், சூர்யகுமார் மிடில் -ஆடரில் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.

Advertisment

தற்போது அவரின் பார்வை டெஸ்ட் போட்டிகள் பக்கமும் திரும்பியுள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமாடிய சூர்யகுமார் அதிரடியாக விளையாடினார். இந்த நிலையில், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' உடனான உரையாடலில், அவர் கடந்த ஆறு மாதங்களாக விளையாடி வரும் கிரிக்கெட் பாணி குறித்தும், அவர் விளையாடும் சில ஷாட்களை பற்றியும் ஆச்சரியப்பட்டு பேசியுள்ளார். அவை குறித்து இங்கு பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பையின் போது, ​​நீங்கள் எப்படி 360 டிகிரி கிரிக்கெட்டை சீரான அடிப்படையில் விளையாட முடிந்தது என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்? உங்கள் மந்திரம் என்ன?

நான் உள்நாட்டு மற்றும் ஐ.பி.எல் போட்டிகளில் இதுபோன்ற ஷாட்களை விளையாடிக்கொண்டிருந்தேன், ஆனால் பெரிய போட்டிகளில் அதை வெற்றிகரமாக செய்தது என்னையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த மூன்று மாதங்களில் எனது பேட்டிங் வீடியோக்களை மறுநாள் பார்த்துள்ளேன்.'நான் இதை எப்படி செய்தேன்?' என்று எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன். நான் அதை சமூக ஊடகங்களில் பார்த்தேன். அது எனது டைம்லைனில் திரும்பத் திரும்ப வந்து. அதனால் நான் அனைத்தையும் பார்த்தேன்.

இதுபோன்ற ஸ்ட்ரோக்குகளை நீங்கள் விளையாடியபோது அணியின் விருப்பம் என்ன?

ரோஹித் (சர்மா) மட்டும்தான் என்னை ரொம்ப நாளாகப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த சீசனில், அவர் பல ஷாட்களை பார்த்தார், அவர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு சில கேம்களில், "இப்போது நான் உன்னைப் பற்றி சொல்ல எதுவும் இல்லை" என்றார். ஒருமுறை நான் விராட் (கோலி) பாயுடன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ​​அவர் வந்து என்னிடம், 'நீ வீடியோ கேம் விளையாடுகிறாயா என்ன? வேறு லெவலில் பேட்டிங் செய்கிறாய்’ என்றார். இந்த விஷயங்களைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

publive-image

ராகுல் (டிராவிட்) பாயிடமும் பேசினேன். இந்த மாதிரியான என் இன்னிங்ஸைப் பார்த்ததும், அவர் வந்து, நான் எந்தப் பொசிஷனில் பேட் செய்கிறேன், நான் போய் ஆட்டத்தையே மாற்றாலாம் என்று சொன்னார். அவர் இந்திய பயிற்சியாளராக ஆனவுடன், நான் அவரிடம் சென்று ஒருமுறை, 'போட்டியில் 7-14 ஓவர்களுக்கு இடையில் இருக்கும்போது, ​​தயவுசெய்து என்னை பேட்டிங் செய்ய அனுப்புங்கள்' என்று சொன்னேன். அந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பலமுறை பேட்டிங் செய்துள்ளேன். அந்த குறிப்பிட்ட சூழ்நிலையில் எப்படி ரன் அடிக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். என் மனசு தெளிவடைந்து தான் போய் சொன்னேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டு நான் பேட்டிங் செய்ய வெளியே செல்லும்போதெல்லாம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்படி கூறினார்.

அணியில் அதிக சூட்கேஸ்களை நீங்கள் எடுத்துச் செல்கிறீர்கள் என்று ரோஹித் சர்மா ஒருமுறை கூறினார். ஏதேனும் காரணம் உள்ளதா?

(சிரிக்கிறார்) என் மனைவி என்னுடன் பயணம் செய்கிறார். எனவே ஒரு சில சூட்கேஸ்கள் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக நாம் வெளிநாடு செல்லும்போது. இது குளிர் அல்லது வெப்பமான காலநிலையாக இருக்கலாம். எனவே, அதற்கு வெவ்வேறு ஆடைகளுக்கு காலணிகள் உள்ளன என்று கூறி சிரிக்கிறார்.

அவர் (ரோஹித்) சொன்னது என்னவென்றால், நான் பேட்டிங் செய்ய வெளியே வந்தவுடன் கூடுதல் பொருட்களை எடுத்துச் சென்றேனா? திட்டமிடுதலின் அடிப்படையில் என்னிடம் கூடுதல் பொருட்கள் இருந்தால், அதை நான் மைதானத்தில் விட்டுவிடுகிறேன் என்று அவரிடம் கூறியிருந்தேன். நான் களத்தில் இருக்கும்போது, ​​நான் வேறு எதையும் பற்றி யோசிப்பதில்லை. நான் ஸ்கோர் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், நான் திரும்பி வந்ததும், நாங்கள் வீரர்கள் ஒன்றாக அமர்ந்திருக்கும் வரை யாரிடமும் கிரிக்கெட்டைப் பற்றி விவாதிப்பதில்லை.

நீங்கள் உங்கள் அறைக்கு திரும்பியதும் என்ன செய்வீர்கள்?

நான் திரும்பி வந்ததும் எனது வீடியோக்களை பார்க்கிறேன். நான் சூழ்நிலைகளைப் படித்து என் சக தோழர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.

publive-image

Suryakumar Yadav within striking distance of becoming world No. 1 T20I batter.(photo:Twitter)

நீங்கள் பேட் செய்ய வெளியே செல்வதற்கு முன் ஏதேனும் சடங்குகள் (rituals ) செய்வீர்களா?

உண்மையில், என்னிடம் அப்படி எதுவும் இல்லை. நான் அங்கும் இங்கும் பார்க்காமல் டக்அவுட் அருகே அமர்ந்து முழு ஆட்டத்தையும் பார்க்கிறேன். நான் அருகில் டிவி பார்ப்பதில்லை. நான் பேட்டிங் செய்ய செல்லும் முன் எல்லைக்கு அருகில் வார்ம் அப் செய்ய விரும்புகிறேன். நான் எப்போதும் பேட்டிங் செய்ய வெளியே செல்லும் போது வேகமாக ஓடுவேன். அதுதான் எனக்குள்ள இருக்கும் ஒரே உற்சாகம். ஒவ்வொரு இரண்டாவது பந்திலும், நான் நீட்டி, ஸ்ட்ரெட்சிங் செய்து கொள்வேன். பின்னர் பேட்டை கையில் வைத்து உருட்டிக்கொள்வேன். அது எனக்கு பேட் கையில் உள்ளது என்பது போன்ற உணர்வைக் கொடுக்கும்.

நான் மைத்தனத்தில் வேகமாக ஓடுவதற்குக் காரணம், நான் நடுப்பகுதியை அடையும் வரை என் கால்கள் சுதந்திரமாக இருப்பதை உணர வேண்டும். முதல் பந்தில் மூன்று ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்வது?. அப்போது உடல் குளிர்ச்சியாக இருக்கக்கூடாது.

ஒரு பேட்ஸ்மேனாக, எல்லாம் சரியாக இருப்பதாக எப்போது உணர்கிறீர்கள்?

பேட்டின் சத்தம் இன்று என்னுடைய நாள் என்று உணர வைக்கிறது. அதே நேரத்தில், நிகழ்காலத்தில் இருப்பது கடினம். ஏனென்றால் இன்று என்னால் நிறைய ரன்கள் பெற முடியும் என்று என் மனம் சொல்கிறது. நிகழ்காலத்தில் இருப்பது முக்கியம். முதல் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தைப் போலவே, முதல் மூன்று பந்துகளில் 10 ரன்கள் எடுத்தேன். எனக்கு ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்தது. அந்த சூழ்நிலையில், யாராவது 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தால், போட்டி முடிந்தது. நிறைய ஸ்கோர் என உணர்ந்ததால் வெளியே வந்தேன். எனது எண்ணம் எப்போதுமே விளையாட்டை மாற்ற வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.

எந்த இன்னிங்ஸ், உங்கள் கருத்துப்படி, SKY-க்கு உறுதியான நாக்?

பெர்த்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அரைசதம் அடித்ததே எனக்கு முக்கிய நாக் என்று நினைக்கிறேன். இதுவரை நான் எதிர்கொண்ட விக்கெட்களில் இது மிகவும் சவாலான விக்கெட். ஆட்டத்திற்கு முன் 15 நிமிடம் நெட்டில் பேட் செய்யச் சென்றேன், அங்கேயே பெர்த் போன்ற உணர்வைப் பெற்றேன். பயிற்சி ஆடுகளங்கள் வேகமாக இருந்தன. எனவே நான் வெறும் 15 பந்துகளை எதிர்கொண்டேன். விக்கி பாஜியிடம் (பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோட்) இன்னைக்கு நான் முடித்துவிட்டேன், என்ன பேட்டிங் செய்ய வேண்டுமோ அதை போட்டியில் செய்வேன் என்றேன்.

நான் பேட்டிங் செய்யச் சென்றபோது, ​இந்த ஆடுகளம் நான் நினைத்ததை விட வேகமாக உள்ளது என்று எனக்கு நானே சொன்னேன். அதனால், நான்-ஸ்ட்ரைக்கர் இறுதிக்கு சென்றபோது, ​​பவுன்ஸ் கூட இருப்பதால் எந்த ஷாட்களை ஆடலாம் என்று யோசித்தேன். நாங்கள் 5 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தபோது, ​​நாங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. நாங்கள் 75 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கலாம். ஆனால் நான் நேர்மறையான பாதையில் செல்ல முடிவு செய்தேன்.

publive-image

Suryakumar Yadav, of India, hits 4 during the third T20I match between West Indies and India at Warner Park in Basseterre, Saint Kitts and Nevis, on August 2, 2022. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

உங்களுக்குச் சந்தேகம் வரும்போதெல்லாம் நீங்கள் அணியில் அழைக்கக்கூடிய நபர் யார்?

நான் ரோஹித்துடன் நல்ல உறவைப் பகிர்ந்து கொள்கிறேன். அதனால் நான் அவருடன் பேசுகிறேன். நான் என் கருத்துக்களை கூறுவேன். அதில் அவருடைய பார்வையையும் எடுத்துக்கொள்கிறேன்.

நீங்கள் நிறைய திரைப்படங்கள் பார்ப்பதாக உங்கள் மனைவி கூறுகிறார்?

நான் அன்டாஸ் அப்னா அப்னா, சுப் சுப் கே, கோல்மால், ஹல்சுல், ஹெரி ஃபெரி போன்றவற்றைப் பார்க்க விரும்புகிறேன். நான் அவைகளை முடிவில்லாமல் பார்க்க முடியும். அது உலகக் கோப்பை ஆட்டமாக இருந்தாலும் சரி, வேறு எந்த விளையாட்டாக இருந்தாலும் சரி, நான் அதை எனது அறையில் எனது அலைபேசியில் பார்ப்பேன். வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்கும்படி என் மனைவி என்னிடம் கேட்டுக்கொள்வார்.

நீங்கள் வீட்டிற்கு வந்தவுடன் மாற்றத்தை உணர்ந்தீர்களா?

publive-image

நான் செல்லும் எல்லா இடங்களிலும், மக்கள் என்னை துரத்துகிறார்கள், இது எனக்கு புதியது. ஆஸ்திரேலியா அல்லது நியூசிலாந்தில் நான் சந்தித்த ஒவ்வொரு இந்தியரும், சிங்கப்பூர் விமான நிலையத்தில் கூட, ஒரு ஜோடி “சூர்யகுமார் யாதவ், எப்படி இருக்கிறீர்கள்” என்று கத்தினார்கள். நான் அதிர்ச்சியடைந்தேன், அவர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள், நான் என்ன செய்தேன்?. நான் என் விமானத்தைப் பிடிக்க ஓடினேன். நிச்சயம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நான் முன்பு போலவே இருக்கிறேன். என் நேரம் மாறிவிட்டது. இப்போது அவர்களுடன் பயணம் செய்வது எளிதல்ல என்று குடும்பத்தினருக்குத் தெரியும். முன்பெல்லாம் நாங்கள் குடும்ப விருந்து அல்லது திரைப்படத்திற்கு வெளியே செல்வோம். இவை நான் ரசித்த விஷயங்கள், ஆனால் இப்போது கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

நீங்கள் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆட வேண்டும் என்று எல்லோரும் சொல்கிறார்கள்?

நான் நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன். நான் இந்த வடிவத்தில் விளையாடினேன். சிவப்பு-பந்து கிரிக்கெட் பற்றி எனக்கு ஒரு யோசனை உள்ளது. ஏனென்றால் நாம் அனைவரும் சிவப்பு-பந்து கிரிக்கெட்டில் இருந்து தொடங்குகிறோம். ஆம், நிலைமைகள் சவாலானவை. ஆனால் நீங்கள் உங்கள் மனதைப் பயன்படுத்தி உங்கள் விளையாட்டை மாற்றினால், நீங்கள் வெற்றிபெறலாம்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Indian Cricket Suryakumar Yadav Rahul Dravid
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment