33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: India at Paris Olympics 2024 Day 6 LIVE Updates: Swapnil Kusale wins 50m rifle 3Positions bronze medal
இந்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் 6-வது நாளான இன்று (வியாழக்கிழமை) துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 3-வது பதக்கங்கள் கிடைத்துள்ளன. 3 பதக்கங்களும் துப்பாக்கி சுடுதலில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் போட்டியில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“