sydney cricket news in tamil: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. அதில் இந்திய அணி கிரிக்கெட் வீரர்களை சந்திக்க வைக்கிறோம் என விளம்பர பதாகைகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அந்த பிரசுரங்களில் ஒரு தலைக்கு 550 ஆஸ்திரேலிய டாலர்கள் செலுத்தினால் நல்ல உணவு, பீர், ஒயின், குளிர்பானம், மற்றும் வீரர்களுடன் நேர்காணல்கள் என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதோடு ஜனவரி 5 ஆம் தேதி சிட்னியில் உள்ள மன்ஜிட்ஸ் வார்ஃப் என்ற உணவகத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 550 ஆஸ்திரேலிய டாலர்கள் என்பது இந்திய மதிப்பில் ரூ. 31,083 ஆகும்.
இந்திய கிரிக்கெட் அணி 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட சிட்னியில் தரையிறங்கி இருந்தது. அதனால் இந்த விளம்பரத்தை நம்பி 200 மேற்பட்டவர்கள் பணம் செலுத்தியுள்ளனர். அதோடு இந்திய அணியை சந்திக்க ஆவலோடு உணவகம் முன்பாக திரண்டுள்ளனர். ஆனால் அவர்களை வரவேற்க அங்கே காவலர்கள் தான் நின்று கொண்டிருந்தனர். 550 ஆஸ்திரேலிய டாலர்கள் செலுத்திய அவர்களுக்கு வெறும் ஏமாற்றமே மிஞ்சி இருந்தது. இதையடுத்து சிட்னி போலீசார் மன்ஜிட்ஸ் வார்ஃப் உணவக பொது மேலாளர் டீப் குஜ்ராலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மற்றும் விளம்பரம் செய்த அந்த மர்ம நபரை கைது செய்துள்ளனர்.
இது பற்றி அந்த உணவக பொது மேலாளர் டீப் குஜ்ராலிடம் கேட்டபோது, ” எங்களுடைய உணவத்தில் மிச்செலின் மற்றும் உயர் தர உணவுகளை பரிமாறுகின்றோம். இங்கு உண்ண இரண்டு வாரங்களுக்கு முன்பே முன் பதிவு செய்யவேண்டும். அதோடு இந்திய வீரர்கள் சிட்னிக்கு விளையாட வந்தால் எங்கள் உணவகத்தையே பெரிதும் தெரிவு செய்வார்கள். இதை அறிந்த இந்த மர்ம நபர், சில மாதங்களுக்கு முன்பே என்னை தொடர்பு கொண்டார். மொத்த இருக்கைகளையும் பதிவு செய்ய வேண்டும் என்றால் 75,000 ஆஸ்திரேலிய டாலர்கள் செலவாகும். ஆனால் இவர் 1,000 ஆஸ்திரேலிய டாலர்களை முன் பணமாக செலுத்தினார். மீத தொகைக்கு அவரை அணுகினோம், ஆனால் பதில் ஏதும் கிடைக்கவில்லை. எனவே இந்த நிகழ்வு நடக்கப்போவதில்லை என்று எங்களுக்குத் முன்பே தெரிய வந்தது. அதனால் இது பற்றி ஒரு மாதத்திற்கு முன்பாகவே போலீசாரிடம் தெரிவித்தோம். அவர்களும் அந்த மர்ம நபரை எளிதாக பிடிக்க முடிந்தது. இப்போது சிறையில் அடைக்கப்பட்டுளார். மற்றும் அவர் மோசடி செய்த பணத்தை திருப்பி செலுத்தியே ஆக வேண்டும்”என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Wine and dine with indian cricketers at sydney 200 people cheated
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : உங்கள் பெயரை சரிபார்க்க வேண்டுமா?
அட! நம்ம சசிகுமாரா இது? சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் மாஸ் லுக்
ரூ 74 லட்சம் பணத்துடன் சிக்கிய சென்னை சுங்க அதிகாரி: பெங்களூரு விமான நிலையத்தில் விசாரணை
காலையில் தொடங்கிய ரெய்டு : மத போதகர் பால் தினகரன் வீட்டில் பரபரப்பு!
கொரோனா தொற்று : மருத்துவமனையில் இருக்கும் அமைச்சர் காமராஜ் உடல்நிலை கவலைக்கிடம்!
Tamil News Today Live : டிராக்டர் பேரணியில் தலையிட போவதில்லை – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்