scorecardresearch

வெறும் 15 ரன்களில் மொத்த அணியும் சுருண்ட ஆச்சரியம்: டி20 வரலாற்றில் முதல் முறை

பிக் பாஷ் வரலாற்றில் இதற்கு முன் 2015ல் ஸ்டார்ஸுக்கு எதிராக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 57 ரன்களை எடுத்தது குறைந்த ஸ்கோராக இருந்தது.

Sydney Thunder dismissed for 15, lowest total in men’s T20 cricket Tamil News
Adelaide Strikers players celebrate dismissing Sydney Thunder for 15 in 2022/23 Big Bash League. (Photo: Strikers/Twitter)

sydney thunder vs adelaide strikers highlights in tamil: பிக்பாஷ் லீக் (Big Bash League 2022-23) போட்டிகள் ஆஸ்திரேலியாவில் கடந்த 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் சிட்னி தண்டர்ஸ் – அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 140 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய சிட்னி தண்டர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ். அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுகாமல் வெளியேறினார். பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

அடிலெய்டு அணியின் வாஸ் அகர் மற்றும் ஹென்றி தோர்ன்டன் மாறி மாறி வேகத்தாக்குதல் தொடுத்தனர். அதனை சமாளிக்க முடியாமல் திணறி சிட்னி தண்டர்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 5 ரன்கள் எடுத்தார். இறுதியில் 5.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சிட்னி தண்டர்ஸ் அணி வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியடைந்தது. இதன் மூலம் சிட்னியை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அடிலெய்டு அபார வெற்றிபெற்றது.

பந்துவீச்சில் மிரட்டி எடுத்த அடிலெய்டு அணியின் ஹெண்ட்ரி 2.5 ஓவரில் 1 மேடன் உள்பட 3 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வாஸ் அஹர் 2 ஓவர் வீசி 6 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேதிவ் ஷார்ட் 1 ஓவர் வீசி 5 ரன் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 15 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகுவது இதுவே முதல் முறையாகும். மேலும், ஒரு அணியின் குறைந்தபட்ச ரன் இதுவாகும். பிக் பாஷ் வரலாற்றில் இதற்கு முன் 2015ல் ஸ்டார்ஸுக்கு எதிராக மெல்போர்ன் ரெனிகேட்ஸ் 57 ரன்களை எடுத்தது. சிட்னி தண்டர்சின் மொத்த 15 ரன்களும் இப்போது தொழில்முறை கிரிக்கெட்டில் 1983 க்குப் பிறகு மிகக் குறைந்த ஸ்கோராகவும், எல்லா நேரத்திலும் ஏழாவது குறைந்த ஸ்கோராகவும் உள்ளது.

உலக டி20 கிரிக்கெட்டில் இதற்கு முன் செக் குடியரசிற்கு எதிராக துருக்கி 21 ரன்கள் எடுத்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Sydney thunder dismissed for 15 lowest total in mens t20 cricket tamil news

Best of Express