சையத் முஷ்டாக் அலி டி 20 : கேரள அணியில் இடம்பெற்ற ஸ்ரீசாந்த்

ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதால் 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசந்த் தற்போது சையத் முஷ்டாக் அலி டி20 தொடருக்கான கேரளா அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததால் ஏழு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தற்போது உள்ளூர் டி20தொடரான சையத் முஷ்டாக் அணி டி20 தொடரில் கேரளா அணிக்காக விளையாட உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ். ஸ்ரீசந்த் கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த தொடரில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்த அவர், கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார்.

தற்போது தடையில் இருந்து மீண்டுவந்துள்ள அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கொட் தொடரில் விளையாடுவேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி டி 20 போட்டிகளுக்காக கேரள அணியில் ஸ்ரீசந்த் இடம் பிடித்துள்ளார். 7 ஆண்டுகள் தடை முடிந்து அவர் பங்கேற்கும் முதல் உள்நாட்டு தொடர் இதுவாகும்.

முன்னதாக, இந்த மாதம் ஆலப்புழாவில் நடைபெற் இருந்த உள்ளூர் டி 20 போட்டிக்கான அணியில் ஸ்ரீசந்த் சேர்க்கப்பட்ட நிலையில், கொரோனா அச்சுறுதுதல் காரணமாக அந்த தொடர் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சையத் முஷ்டாக் அலி டி / 20 தொடருக்கான கேரள அணி:

சஞ்சு சாம்சன் (கே)  சச்சின் பேபி (துணை கே)  தவிர, ஸ்ரீசாந்த், பசில் தம்பி, ஜலாஜ் சக்சேனா, ராபின் உத்தப்பா, விஷ்ணு வினோத், சல்மான் நிசார், நிதீஷ் எம் டி ஆசிப் கே எம். அக்‌ஷய் சந்திரன், அபிஷேக் மோகன் எஸ்.எல்., வினூப் எஸ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Syed mushtaq ali t20 sreesanth in kerala team

Next Story
தப்பிப் பிழைத்து மீண்டும் வந்த ஸ்டார்க்; கே எல் ராகுல் கொடுத்த வரவேற்பு: வீடியோKL Rahul has animated words with Mitchell Starc after his dismissal is reversed - தப்பிப் பிழைத்து மீண்டும் வந்த ஸ்டார்க்; கே எல் ராகுல் கொடுத்த வரவேற்பு: வீடியோ
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com