Syed-mushtaq-ali-trophy | tamilnadu-cricket-team: சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் 38 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அந்த அணிகள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ, பி மற்றும் சி பிரிவில் தலா 8 அணிகளும், டி மற்றும் ஈ பிரிவில் தலா 7 அணிகளும் இடம்பிடித்துள்ளன. இத்தொடர் ஜெய்ப்பூர், மும்பை, ராஞ்சி, மொகாலி மற்றும் டேராடூன் ஆகிய 5 நகரங்களில் நடக்கிறது. நாக் அவுட் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற உள்ளன.
எலைட் ஏ (ஜெய்ப்பூர்): ஹரியானா, மும்பை, சத்தீஸ்கர், மிசோரம், ஹைதராபாத், மேகாலயா, பரோடா, ஜம்மு மற்றும் காஷ்மீர்
எலைட் பி (மும்பை): இமாச்சல பிரதேசம், கேரளா, சர்வீசஸ், சிக்கிம், அசாம், ஒடிசா, பீகார், சண்டிகர்
எலைட் சி (ராஞ்சி): பஞ்சாப், சவுராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், குஜராத், ஆந்திரா, கோவா, மணிப்பூர், ரயில்வே
எலைட் டி (மொஹாலி): உத்தரகாண்ட், விதர்பா, வங்காளம், மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, ராஜஸ்தான், ஜார்கண்ட்
எலைட் ஈ (டேராடூன்): கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா
வாஷிங்டன் சுந்தர் தலைமையில் தமிழ்நாடு அணி
இந்நிலையில், இந்த தொடருக்கான தமிழ்நாடு அணி ஆல்ரவுண்டர் வீரர் வாஷிங்டன் சுந்தர் தலைமையில் களமிறங்கியுள்ளது. 16ம் தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் கர்நாடக அணியை தமிழ்நாடு எதிர்கொண்டது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த இந்தப் போட்டியின் போது மழை வெளுத்து வாங்கியது. இதனால் போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 17ம் தேதி நடந்த போட்டியில் தமிழ்நாடு அணி உத்தரபிரதேச அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் உத்தரபிரதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று நடந்த போட்டியில் தமிழ்நாடு - திரிபுரா அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜி சதீஷ் 52 ரன்கள் எடுத்தார். தமிழ்நாடு அணி தரப்பில் குல்தீப் சென் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டை கைப்பற்றினர்.
தொடர்ந்து 130 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தமிழ்நாடு அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 16.5 வது ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது. தமிழக அணி தரப்பில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹரி நிஷாந்த் - சாய் சுதர்சன் அரைசதம் அடித்து மிரட்டினர். 46 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்ஸரிகளை பறக்க விட்ட ஹரி நிஷாந்த் 59 ரன்கள் எடுத்தார்.
கடைசி வரை ஆட்டமிழக்காத சாய் சுதர்சன் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்தார். ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியை விரட்டிய ஷாரு கான் 15 ரன்கள் எடுத்தார். இறுதியில் தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை அபார வெற்றி பெற்றது.
Another #smat victory for Tamil Nadu 🎉@sais_1509 @hari.nishaanth268 partnered for win!#tnca #tamilnadu #tamilnaducricket #syedmushtaqalitrophy pic.twitter.com/RWXWbugA7q
— TNCA (@TNCACricket) October 19, 2023
தமிழ்நாடு அணி
வாஷிங்டன் சுந்தர் (கேப்டன்), பி சாய் சுதர்சன் (துணைகேப்டன்), என் ஜெகதீசன், விஜய் சங்கர், சி ஹரி நிஷாந்த், எம் ஷாருக் கான், ஜி அஜிதேஷ், பி அபராஜித், ஆர் சஞ்சய் யாதவ், எம் முகமது, ஆர் சாய் கிஷோர், சிவி வருண், டி நடராஜன், குல்தீப் ராம்பால் சென் மற்றும் சந்தீப் வாரியர்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.