Advertisment

IND vs ENG Highlights: ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் - பட்லர்; இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs ENG T20 Match T20 World Cup match highlights tamil

India vs England {IND vs ENG } T20 Match T20 World Cup match highlights tamil

IND vs ENG T20 world cup Semi final match 2022 Highlights in tamil: 8-வது டி- 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

Advertisment

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் கோலி 50 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி துரத்தியது.

இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜோஸ் பட்லர் - அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை தும்சம் செய்தது. மேலும், பவுண்டரி, சிக்ஸர் என வானவேடிக்கையும் காட்டினர். இந்த ஜோடியை உடைக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். அவர்கள் போராட்டம் தோல்வியில் தான் முடிந்தது.

மிகவும் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியின் தொடக்க ஜோடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர். விக்கெட் இழப்பின்றி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தத அந்த அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த தொடக்க வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டர்கள் 7 சிக்ஸர்களுடன் 86 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரிங்க்ள் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களும் எடுத்தனர்.

நடப்பு டி- 20 உலக கோப்பையில் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், தற்போது 2வது அரையிறுதியில் இந்தியாவை இங்கிலாந்து வீழ்த்தியுள்ளது. இதனால், இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த ஆட்டம் வருகிற ஞாயிற்று கிழமை (நவம்பர் 13 ஆம் தேதி) மெல்போர்னில் அரங்கேறுகிறது.



  • 16:43 (IST) 10 Nov 2022
    ரன்மழை பொழிந்த ஹேல்ஸ் - பட்லர்... இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்துக்கு அபார வெற்றி வெற்றி

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டிப்பிடித்தது. இதனால், அந்த அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் ரன் மழை பொழிந்த தொடக்க வீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில் 4 பவுண்டர்கள் 7 சிக்ஸர்களுடன் 86 ரன்களும், கேப்டன் ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 9 பவுண்டரிங்க்ள் 3 சிக்ஸர்களுடன் 80 ரன்களும் எடுத்தனர்.



  • 16:20 (IST) 10 Nov 2022
    கேப்டன் பட்லர் அரைசதம்!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி துரத்தி வருகிறது. அந்த அணி தொடக்க வீரர் கேப்டன் பட்லர் அரைசதம் விளாசினார்.



  • 16:08 (IST) 10 Nov 2022
    10 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி துரத்தி வருகிறது. அந்த அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 57 ரன்னுடனும், ஜோஸ் பட்லர் 37 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



  • 15:43 (IST) 10 Nov 2022
    5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து!

    இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி துரத்தி வருகிறது. அந்த அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்துள்ளது.

    இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் ஹேல்ஸ் 26 ரன்னுடனும், ஜோஸ் பட்லர் 24 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.



  • 15:08 (IST) 10 Nov 2022
    கோலி ஹர்திக் பாண்ட்யா அரை சதம்; இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு 169 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 63 ரன்கள் குவித்தார்.



  • 14:57 (IST) 10 Nov 2022
    அரை சதம் அடித்தார் ஹர்திக் பாண்ட்யா

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அதிரடியாக விளையாடி ஹர்திக் பாண்ட்யா 29 பந்துகளில் 52 ரன்கள் குவித்து அரை சதம் அடித்தார்.



  • 14:54 (IST) 10 Nov 2022
    உலகக் கோப்பை போட்டிகளில் கோலி 4,000 கடந்து சாதனை

    உலகக் கோப்பை போட்டிகளில் விராட் கோலி 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மேலும், 200வது அரை சதம் அடித்துள்ளார். அரை சதம் அடித்த அடுத்த பந்திலேயே அவுட் ஆனார்.



  • 14:52 (IST) 10 Nov 2022
    உலகக் கோப்பை போட்டிகளில் கோலி 4,000 கடந்து சாதனை

    உலகக் கோப்பை போட்டிகளில் விராட் கோலி 4,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.



  • 14:48 (IST) 10 Nov 2022
    சிக்ஸ் பறக்க விடும் ஹரிதிக் பாண்ட்யா

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யா பந்தை சிக்ஸ்-க்கு பறக்க விட்டு வருகிறார். தொடர்ந்து 2 சிக்ஸ் அடித்துள்ளார்.



  • 14:28 (IST) 10 Nov 2022
    அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் அவுட்

    9 பந்துகளில் 14 ரன்கள் குவித்த அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் ஆதில் ரஷித் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



  • 14:06 (IST) 10 Nov 2022
    ரோஹித் சர்மா அவுட்

    ரோஹித் சர்மா 27ரன்கள் எடுத்திருந்த நிலையில் பந்தை தூக்கி அடித்தபோது சாம் கரனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.



  • 14:04 (IST) 10 Nov 2022
    50 ரன்களைத் தாண்டியது இந்தியா

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 8 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் குவிப்பு



  • 13:59 (IST) 10 Nov 2022
    மாறி மாறி பந்தை பவுண்டரிக்கு விரட்டும் கோலி, ரோஹித் சர்மா

    விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் மாறி மாறி பந்தை பவுண்டரிக்கு விரட்டி வருகின்றனர்.



  • 13:57 (IST) 10 Nov 2022
    6 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் குவிப்பு

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 6 ஓவர்கள் முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் குவிப்பு

    கோலி 12 ரன்கள்

    ரோஹித் சர்மா 21



  • 13:50 (IST) 10 Nov 2022
    தொடர்ந்து 2 பவுண்டரி அடித்தார் ரோஹித் சர்மா

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தொடர்ந்து ரோஹித் சர்மா 2 பவுண்டரி அடித்தார்.



  • 13:48 (IST) 10 Nov 2022
    இந்தியா 4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் குவிப்பு

    இந்தியா 4 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் குவிப்பு

    கோலி 10

    ரோஹித் 5



  • 13:42 (IST) 10 Nov 2022
    நூலிழையில் தப்பினார் கோலி; கேட்ச்சை கோட்டை விட்ட இங்கிலாந்து

    விராட் கோலி ஸ்லிப் பகுதியி கேட்ச் கொடுக்க அதை இங்கிலாந்து வீரர் கோட்டை விட்டார்.



  • 13:38 (IST) 10 Nov 2022
    கே.எல். ராகுல் அவுட்

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல். ராகுல் 5 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார்.



  • 13:33 (IST) 10 Nov 2022
    முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கே.எல். ராகுல்

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், முதல் ஓவரில் முதல் பந்தை கே.எல். ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார்.



  • 13:28 (IST) 10 Nov 2022
    தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல் - ரோஹித் சர் மா களம் இறங்கினார்கள்

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல். ராகுல் - ரோஹித் சர் மா களம் இறங்கினார்கள். கே.எல். ராகுல் ஸ்டிரைக் செய்கிறார்.



  • 13:23 (IST) 10 Nov 2022
    இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி: இந்தியா பிளேயிங் லெவன்

    கே.எல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்



  • 13:15 (IST) 10 Nov 2022
    இந்தியா பிளேயிங் லெவனில் ரிஷப் பன்ட் சேர்ப்பு

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா பிளேயிங் லெவனில் ரிஷப் பன்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.



  • 13:11 (IST) 10 Nov 2022
    போட்டி தொடங்குவதற்கு முன் இந்தியா vs இங்கிலாந்து கேப்டன்கள் என்ன சொல்கிறார்கள்?

    இங்கிலாந்து கேப்டன் ஜாப் பட்லர்: நாங்கள் முதலில் பந்து வீசுவோம். இங்கே ஒரு பெரிய சூழ்நிலை இருக்கும். வெவ்வேறு அளவுகளில், நாம் மாற்றியமைக்க வேண்டும். எங்களிடம் இரண்டு மாற்றங்கள் உள்ளன - மாலன் மற்றும் வூட் காயங்களுடன் வெளியேறினர் - சால்ட் மற்றும் ஜோர்டான் உள்ளே வருகிறார்கள். ஒரு நல்ல விக்கெட் தெரிகிறது. ஆட்டம் முழுவதும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா: எப்படியும் முதலில் பேட்டிங் செய்திருப்போம். நாங்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடியுள்ளோம், எங்களிடம் உள்ள அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதற்கான மற்றொரு வாய்ப்பு. நரம்பைப் பிடித்து ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் செல்வது முக்கியம். சமீப வருடங்களில் இவர்களுடன் ஓரளவுக்கு விளையாடியுள்ளோம், அவர்களுக்கு என்ன பலம்-பலவீனங்கள் உள்ளன என்பதை அறிவோம். அதைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம். நிதானமாக இருந்து நாம் செய்ய விரும்புவதைச் செய்வது முக்கியம். அது (காயம்) ஒரு பயமாக இருந்தது ஆனால் நான் இப்போது நலமாக இருக்கிறேன்.



  • 13:08 (IST) 10 Nov 2022
    இந்தியா பேட்டிங்; இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

    இந்தியா vs இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.



  • 12:50 (IST) 10 Nov 2022
    இந்தியா vs இங்கிலாந்து நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

    இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியின் நேரடி ஒளிபரப்புக்கு வரவேற்கிறோம்.



  • 12:00 (IST) 10 Nov 2022
    பெரிய மைதானங்களில் ஆட விரும்பும் சூர்யகுமார் யாதவ்

    சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, சிறிய மைதானங்களில் விளையாடுவதை விட பெரிய மைதானங்களில் விளையாடுவதையே சூர்யகுமார் யாதவ் விரும்புகிறார். ஏனென்றால் பெரிய மைதனங்களில் இடைவெளி அதிகமாக இருக்கும். சிறிய மைதானங்களில் இடைவெளியை பார்ப்பது மிகவும் கடினம். இதனால் தான் அவர் பெரிய மைதானங்களை விரும்புகிறார். அதுதான் அவரது பலம் என்று கூறியுள்ளார்.



  • 11:57 (IST) 10 Nov 2022
    100-வது சிக்சரை அடிக்கும் முயற்சியில் கே.எல்.ராகுல்

    இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரார் கே.எல்.ராகுல் இன்றைய போட்டியில் ஒரு சிக்சர் அடித்தால், டி20 போட்டிகளில் 100 சிக்சர் அடித்த 14வது மற்றும் 3-வது இந்திய வீரர் என்ற சாதனை படைக்க வாய்ப்புள்ளது.



  • 11:53 (IST) 10 Nov 2022
    பட்லரை அச்சுறுத்துவாரா புவனேஷ்வர் குமார்?

    டி20 போட்டிகளில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரின் 30 பந்துகளை சந்தித்துள்ள இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் அதில் 5 முறை ஆட்டமிழந்துள்ளார். இதனால் இன்றைய போட்டியில் பவர்ப்ளே ஓவரில் புவனேஷ்வர் மீண்டும் பட்லருக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • 11:30 (IST) 10 Nov 2022
    மெதுவான அடிலெய்டு ஆடுகளம் : இந்திய அணியில் சாஹல் இடம் பெறுவாரா?

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறு போட்டியில் இந்தியாவின் பிளேயிங் லெவன் அணி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இந்திய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அணியில் சில மாற்றங்களைச் செய்யத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். டிராவிட், நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் அணி இருக்கும் என்று கூறப்படுகிறது. அடிலெய்டு ஓவல் ஆடுகளம் மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு உதவுவதால் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் தேர்ந்தெடுக்கப்படலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.



  • 09:44 (IST) 10 Nov 2022
    புதிய சாதனையை நோக்கி விராட் கோலி

    நடப்பு டி20 உலககோப்பை தொடரில் 3 அரைசதத்துடன் 246 ரன்கள் குவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலி மேற்கொண்டு 42 ரன்கள் சேர்த்தால் சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார்.



Indian Cricket Team Live Cricket Score T20 Worldcup
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment