Advertisment

டி20 உலகக் கோப்பை: பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா?

ICC announces prize money for the T20 World Cup 2022 Tamil News: டி-20 உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி பெறும் பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
T20 World Cup 2022 prize money: Title winning team to get $1.6 million

T20 World Cup 2022

News about T20 World Cup, prize money tamil: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

Advertisment

இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. முன்னதாக, இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

டி20 உலககோப்பை - பரிசுத்தொகை

publive-image

இந்நிலையில், டி-20 உலக கோப்பையை வெல்லும் அணி பெறும் பரிசுத் தொகை எவ்வளவு என்பதை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி சாம்பியன் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் 13,04,90,640) பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

2-வது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலரும், அரையிறுதியில் தோல்வியுறும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலரும் வழங்கப்படுகிறது.

இந்த தொடரில் வெற்றியைப் பதிவு செய்யும் அணிகளுக்கு 40 ஆயிரம் டாலரும், சூப்பர் 12 சுற்றில் இருந்து வெளியேறும் 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலரும் வழங்கப்பட உள்ளது. மேலும், தொடரின் மொத்த பரிசுத் தொகை 5.6 மில்லியன் (இந்திய பண மதிப்பில் ரூ. 45,67,17,240) ஆகும்.

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம்

T20 World Cup: அலைமோதும் ரசிகர்கள்… விற்று தீர்ந்த IND Vs PAK போட்டிக்கான டிக்கெட்டுகள்!

டி20 உலககோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup India Vs Pakistan Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment