Advertisment

நியூயார்க்கில் இந்தியா - பாக்., மோதல்: ஜரூராக தயார் ஆகும் ஸ்டேடியம் - வீடியோ

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஸ்டேடியம் தயாரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளது.

author-image
WebDesk
New Update
 T20 World Cup 2024 India vs Pakistan Clash  New York Venue Nears Completion video Tamil News

டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக நியூயார்க் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் தீவிரமாக தயாராகி வருகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

India Vs Pakistan | New York | T20 World Cup 2024 | : 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. 

Advertisment

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஸ்டேடியம் தயாரிப்பு பணிகள் நிறைவடைய உள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் டி20 உலகக் கோப்பை போட்டிக்காக 34,000 பேர் அமரும் மைதானம் கட்டும் பணிகள் கடந்தாண்டில் தொடங்கியது. 

இந்த நிலையில், மன்ஹாட்டனுக்கு கிழக்கே 30 மைல் தொலைவில் உள்ள நியூயார்க்கின் ஐசன்ஹோவர் பார்க்-கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது கிழக்கு ஸ்டாண்டிற்கான மாடுலர் கட்டமைப்பின் பணிகள் முடிவடையும் நிலையில்  உள்ளது.  அதே நேரத்தில் மேற்கு ஸ்டாண்ட் இரண்டு வாரங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றாக, இந்த இரண்டு ஸ்டாண்டுகளிலும் 24,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரலாம். 

மேலும் இறுதிப் பகுதிகள் வடக்கு மற்றும் தெற்கு பிரீமியம் விருந்தினர் மற்றும் மீடியா பெவிலியன்கள், அத்துடன் ஸ்டேடியத்தின் அவுட்ஃபீல்ட் மற்றும் பிட்ச் பிளாக் இன்னும் தெற்கு புளோரிடாவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. 

போட்டி நடத்தப்படும் நியூயார்க்கில் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, அங்கு சுமார் 7,11,000 இந்தியர்கள் மற்றும் சுமார் 1,00,000 பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர். டெல்லிக்கும் நியூயார்க்கிற்கும் இடையிலான நேர வித்தியாசம் பத்தரை மணிநேரம் ஆகும். ஆனால் சில இந்திய போட்டிகள் இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு ஏற்ப ஒளிபரப்ப செய்ய திட்டமிடப்பட உள்ளது. 

டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களைப் பொறுத்தவரையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் பார்க், டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம் மற்றும் மன்ஹாட்டன் டவுன்டவுனில் இருந்து 30 மைல் தொலைவில் உள்ள நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் உள்ள ஐசன்ஹோவர் பார்க் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

India Vs Pakistan New York T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment