T20 World Cup 2024 | india-vs-pakistan | new-york: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க்கின் புறநகர் பகுதியில் உள்ள பாப்-அப் மைதானத்தில் நடைபெறும் என்று இங்கிலாந்தின் தி கார்டியன் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் டி20 உலகக் கோப்பை போட்டிக்காக 34,000 பேர் அமரும் தற்காலிக மைதானம் கட்டப்பட்டு உள்ளது. போட்டி நடத்தப்படும் நியூயார்க்கில் சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு தரவுகளின்படி, அங்கு சுமார் 7,11,000 இந்தியர்கள் மற்றும் சுமார் 1,00,000 பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர்.
டெல்லிக்கும் நியூயார்க்கிற்கும் இடையிலான நேர வித்தியாசம் பத்தரை மணிநேரம் ஆகும். ஆனால் சில இந்திய போட்டிகள் இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு ஏற்ப ஒளிபரப்ப செய்ய திட்டமிடப்பட உள்ளது.
டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களைப் பொறுத்தவரையில், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ப்ரோவர்ட் பார்க், டெக்சாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியம் மற்றும் மன்ஹாட்டன் டவுன்டவுனில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள லாங் ஐலேண்டில் உள்ள ஐசன்ஹோவர் பார்க் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளதால், 120 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக்கிற்குள் நுழைகிறது. ஒலிம்பிக்கிற்கு கிரிக்கெட்டின் பாதை ஐ.பி.எல் காலடிச் சுவடுகளால் அழியாமல் பதிக்கப்பட்டுள்ளது. டி 20 வடிவத்தின் எழுச்சியால் ஐ.பி.எல் லீக் வழங்கிய உந்துதல், கண்டங்கள் முழுவதும் உள்ள நாடுகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டு வருகிறது. இதுவே ஒலிம்பிக்கின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு 50 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டதால், தொடர்ந்து ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள அனுமதிக்கவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“