Advertisment

ரன் குவிக்கும் ரேஸில் பாபர் - ரோகித்; கேப்டன்களாக 6 பவுலர்கள்... வெட்டோரி சாதனையை முறியடிக்கப் போவது யார்?

கோலிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை பதிவு செய்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அடைய ரோகித் சர்மாவுக்கு இன்னும் 37 ரன்கள் தேவை.

author-image
WebDesk
New Update
T20 world cup 2024 stats corner Babar Azam Rohit Sharma race rise of bowling captains Tamil News

இந்திய கேப்டன் ரோகித் சர்மா, உலக அரங்கில் சிக்ஸர் விளாசுவதில் முன்னணியில் உள்ளார். அவர் 600 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

T20 World Cup 2024 | Babar Azam | Rohit Sharma: ஃபிரான்சைஸ் டி20 கிரிக்கெட் போட்டிகள் வளர்ந்து வரும் சூழலில், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் 9-வது  டி20 உலகக் கோப்பை தொடரை நடைபெற உள்ளது. சமீபத்தில் முடிவடைந்த ஐ.பி.எல் 2024 சீசனின் போது காட்டப்பட்ட அதே அளவிலான அதிரடி ஆட்டத்தை இதுவரை டி-20 போட்டி கண்டதில்லை. அந்தந்த அணிகளை அவர்களின் சிறப்பியல்பு பாணியில் வழிநடத்துவதோடு, 20 அணிகள் கொண்ட போட்டியின் லீக் கட்டத்தில் டெம்ப்ளேட்டை அமைப்பதில் கேப்டன்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: T20 world cup 2024 stats corner: Babar Azam-Rohit Sharma race, rise of bowling captains and Rohit’s six-hunt

அவ்வகையில், 20 அணிகள் கேப்டன்களின் புள்ளிவிவர சுருக்கம், அவர்கள் எதிர்நோக்கி இருக்கும் மைல்கற்கள் உள்ளிட்டவை குறித்து இங்கு பார்க்கலாம். 

வயது 

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 20 கேப்டன்களின் சராசரி வயது 30.65 ஆக உள்ளது. அவர்களில், மூன்று கேப்டன்கள் 37 ஐத் தாண்டியுள்ளனர். இதில் கனடாவின் தொடக்க ஆட்டக்காரர் சாத் பின் ஜாபர் 37 ஆண்டுகள் 203 நாட்களுடன் மூத்தவராக இருக்கிறார். 

ஸ்காட்லாந்தின் ரிச்சி பெரிங்டன் (37 ஆண்டுகள் 58 நாட்கள்), இந்தியாவின் ரோகித் சர்மா (37 ஆண்டுகள் 31 நாட்கள்) ஆகியோர் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர். இதற்கிடையில், நேபாளத்தின் ரோகித் பவுடல் (21 ஆண்டுகள் 272 நாட்கள்) போட்டியில் இளம் கேப்டனாக இருக்கிறார். 

சிக்ஸ் வேட்டை

இந்திய கேப்டன் ரோகித் சர்மா, உலக அரங்கில் சிக்ஸர் விளாசுவதில் முன்னணியில் உள்ளார். அவர் 600 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், 200 டி20 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் என்ற சாதனையை படைக்க அவருக்கு இன்னும் 10 சிக்ஸர்கள் மட்டுமே தேவை. 

பாபர்- ரோகித் ரேஸ் 

பாபர் அசாம் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இந்த தொடரில் கேப்டன்சி மற்றும் பேட்டிங் முன்னணியில் இணையான ரேஸில் இருப்பார்கள். பாபர் (3987) சமீபத்தில் டி20 போட்டிகளில் முன்னணி ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து ரோகித்தை (3978) பின்னுக்குத் தள்ளினார். மேலும் விராட் கோலியை (4037) முந்தி முதலிடத்தை பிடிக்கும் நோக்கத்தில் உள்ளார்.

இதற்கிடையில், கோலிக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் 1000 ரன்களை பதிவு செய்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை அடைய ரோகித் சர்மாவுக்கு இன்னும்  37 ரன்கள் தேவை. 

போட்டியில் இன்னும் நான்கு வெற்றிகளுடன் 50 டி20ஐ வென்ற முதல் ஆடவர் கேப்டனாக பாபர் ஆக முடியும் என்றாலும், டி20 வடிவத்தில் மிகவும் வெற்றிகரமான இந்திய கேப்டனாக எம்.எஸ் தோனியை விஞ்ச ரோகித்துக்கு (41) இன்னும் ஒரு வெற்றி தேவைப்படுகிறது.

 ஸ்ட்ரைக் ரேட்

டி20-யில் குறைந்தது 400 ரன்களை குவித்த கேப்டன்களில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோவ்மேன் பவல் 172.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

பவலுக்கு அடுத்தபடியாக ரிச்சி பெரிங்டன் (150.15), ஜோஸ் பட்லர் (149.92), ரோகித் சர்மா (148.73) ஆகியோர் இந்த உலகக் கோப்பையில் கேப்டன்களாக உள்ளனர்.

முதல் முறை கேப்டன் 

உலகக் கோப்பையில் 12 வீரர்கள் முதல் முறையாக அந்தந்த அணிகளை வழிநடத்துவார்கள். 20 கேப்டன்களில், கேன் வில்லியம்சன் மிகவும் அனுபவம் வாய்ந்த கேப்டன் ஆவார். 2016 முதல் நியூசிலாந்து கேப்டனாக நான்காவது டி20 உலகக் கோப்பைக்கு அவரது அணியை வழிநடத்துகிறார். 

ஆல்ரவுண்ட் கேப்டனா?

டி20 உலகக் கோப்பையில் 100 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே கேப்டன் என்ற பெருமையை பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஷ் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட முடியும். வனிந்து ஹசரங்கா மற்றும் ரஷித் கான் போன்றவர்களும் களத்தில் உள்ளனர்.

சிக்கனம்

டி20 உலகக் கோப்பையில் கனடா அணியை வழிநடத்தி, கேப்டன் சாத் பின் ஜாபர் டி20 போட்டிகளில் மிகவும் சிக்கனமான ரன்களை விட்டுக் கொடுத்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் நான்கு ஓவர்கள் வீசினார், 2021 இல் பனாமாவுக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை (4-4-0-2) கைப்பற்றியபோது ரன் எதுவும் கொடுக்கவில்லை. 

கேப்டன் - விக்கெட் கீப்பர் 

இந்த ஆண்டு நடக்கும் தொடரில் விக்கெட் கீப்பர்-கேப்டன்களாக ஜோஸ் பட்லர் மற்றும் நெதர்லாந்தின் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆகியோருடன் அமெரிக்காவின் மோனாங்க் படேல் இணைவார். ஒட்டுமொத்தமாக, படேல் ஒன்பது டி20 உலகக் கோப்பைகளில் 17வது கீப்பர்-கேப்டனாக இருப்பார். 2012 மற்றும் 2022 தொடரில் ஒரு சீசனில் அதிக கீப்பர்-கேப்டன்களை தலா ஐந்து பேர் கலந்து கொண்டனர். 

பவுலிங்கில் முத்திரை 

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி, 2007 ஆம் ஆண்டு தொடக்க தொடரில் 11 விக்கெட்டுகளுடன், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டன் என்ற சாதனையை இன்னும் வைத்திருக்கிறார். இந்த ஆண்டு ரஷித் கான் மற்றும் வனிந்து ஹசரங்க உட்பட குறைந்தது 6 பவுலர்கள் கேப்டன்களாக இருப்பதால், வெட்டோரியின் சாதனையை யார் முறியடிப்பார்? என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Rohit Sharma Babar Azam T20 World Cup 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment