scorecardresearch

டி.கே கிரிக்கெட் வாழ்க்கையை கோலி முடித்தாரா? ட்விட்டரில் ரணகளம்

தென்ஆப்பிரக்காவுக்கு எதிரான முந்தைய போட்டியின்போது முதுகுவலியால் அவதிப்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

டி.கே கிரிக்கெட் வாழ்க்கையை கோலி முடித்தாரா? ட்விட்டரில் ரணகளம்

டி20 உலககோப்பை தொடரில் இன்று நடபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அவுட்டான விதம் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 184 ரன்கள் குவித்தது. ஆனால் மழை காரணமாக வங்கதேச அணிக்கு 16 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணைகிக்கப்பட்ட நிலையில், வங்கதேச அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தால் இந்திய 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், இந்திய அணியின் பேட்டிங்கின்போது தினேஷ் கார்த்திக் ஆட்டமிழந்த விதம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தென்ஆப்பிரக்காவுக்கு எதிரான முந்தைய போட்டியின்போது முதுகுவலியால் அவதிப்பட்ட தினேஷ் கார்த்திக் இந்த போட்டியில் களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனாலும் அவர் உடற்தகுதியுடன் இருந்ததால் இன்றைய போட்டியில் களமிறங்கியதாக கூறப்பட்டது.

இதனிடையே டி20 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2 போட்டிகளில் களமிறங்கிய தினெஷ் கார்த்திக் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் இன்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 15.1 ஓவரில் களமிறங்கினார். அப்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது.

இறுதிகட்ட ஓவர் என்பதால் நல்ல ஃபினிஷர் தேவை என்ற நிலையில் களமிறங்கிய கார்த்திக் தொடக்கத்திலேயே பவுண்டரி அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் அவர் 7 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ரன் அவுட் மூலம் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 17வது ஓவரின் கடைசி பந்தை விராட் கோலி எக்ஸ்ட்ரா கவர் நோக்கி அடித்து ரன் எடுக்க முயற்சித்தார். மறுமுனையில் இருந்த கார்த்திக் முழு வேகத்தில் புறப்பட்டார். ஆனால் கோலி உடனடியாக அவரை திருப்பி செல்லுமாறு கையை உயர்த்தினார்.

இதனால் திரும்ப முயற்சி செய்த கார்த்திக் டைவ் அடித்து கிரிஸ்க்குள் வந்தார். ஆனாலும் அதற்குள் பந்து ஸ்டெம்பை தாக்கியது. ஆனாலும் கார்த்திக் அவுட் ஆனதில் சர்ச்சை எழுந்துள்ளது. மூன்றாவது நடுவர், ஒரு சில ரீப்ளேகளைப் பார்த்த பிறகு, பந்து வீச்சாளரின் கைகளுக்கு முன்பே பந்து ஸ்டம்பைத் தாக்கியதாக முடிவு செய்து, கார்த்திக் ரன்-அவுட் என்று தெரிவித்தார்.

ஆனாலும் அடுத்தடுத்து பார்த்த ரீப்ளேயில் வேறு மாதிரி தெரிந்துள்ளது. பந்து முதலில் ஸ்டம்பைத் தாக்கியது தெளிவாகத் தெரிந்தது, ஆனால் அந்தத் தாக்கம் உண்மையில் பெயில்களை வெளியேற்றியதா அல்லது அது பந்து வீச்சாளரின் கைகளால் நிகழ்ந்ததா என்பது குறித்து நிறைய சந்தேகம் இருந்தது. ஆனாலும் அவுட் கொடுத்ததால் கார்த்திக் அதிருப்தியுடன் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்ததால் கார்த்திக் ரன் அவுட் இந்தியாவுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்த கோலியும், அபாரமாக ஆடிய கேஎல் ராகுல் 50 ரன்களும் எடுத்தனர். 67 வலுவான மொத்த அடித்தளத்தை அமைத்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: T20 world cup cricket ind vs ban dinesh karthik run out controversy