scorecardresearch

டி20 உலகோப்பையை வெல்லபோவது யார்? நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் நாளை பலப்பரீட்சை!

New Zealand vs Australia T20 World Cup 2021 Tamil News: டி20 உலகோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நாளை இரவு நடைபெறும் இறுதிபோட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

T20 World Cup final Tamil News: kiwis faces Aussie in 2021 t20 final on November 14

NZ VS AUS T20 World Cup final Tamil News: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 7-வது டி20 உலகோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நாளை இரவு நடைபெறும் இறுதிபோட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை டி20 உலகோப்பையை வெல்லாத இரு அணிகள் மோதவுள்ள நிலையில், எந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

2வது ஐசிசி பட்டத்தை வெல்வாரா கேப்டன் வில்லியம்சன்?

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த அனைத்து ஐசிசி கிரிக்கெட் இறுதி போட்டிகளிலும் இடம்பெற்ற ஒரே அணி என்ற பெருமையை பெற்றுள்ளது. 50 ஓவர் உலகக்கோப்பை 2019, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021 , 20 ஓவர் உலகக்கோப்பை 2021 என அனைத்து தொடர்களிலும் இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள நியூசிலாந்து அணி இந்தாண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பட்டமும் வென்றுள்ளது.

இந்நிலையில், தற்போது நடப்பு டி20 உலகோப்பை தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் ஒரு தோல்வியுடன் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்தப்போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி பெரும் பட்சத்தில், ஒரே ஆண்டில் தனது நாட்டிற்காக இரண்டு ஐசிசி பட்டங்களை பெற்று கொடுத்தத ஒரே கேப்டன் என்ற பெருமைக்கு கேன் வில்லியம்சன் சொந்தமாவார்.

நியூசிலாந்து அணி எப்படி?

நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில், டெரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். பந்துவீச்சில் ட்ரண்ட் போல்ட், சௌதி, மில்னே ஆகியோர் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டிவான் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். இது அந்த அணியை எந்த வகையிலும் பாதிக்காது எனத் தெரிகிறது.

அபாரம் காட்டும் ஆஸ்திரேலியா…

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் ஆகிய வீரர்கள் பேட்டிங்கில் வலு சேர்க்கிறார்கள். பந்துவீச்சில் பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா ஆகிய வீரர்கள் மிரட்டுகிறார்கள்.

அந்த அணி பாகிஸ்தானுடனான பரப்பான அரையிறுதியில் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த ஆட்டத்தில் 7வது வீரராக களமிறங்கிய அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணியை வெற்றி அழைத்து சென்றார்.

நேருக்கு நேர்…

டி-20 உலகக்கோப்பை தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை ஒரே ஒரு போட்டியில் தான் நேருக்கு நேராக சந்தித்துள்ளன. இதில் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றது. எனவே அந்த அணியின் கை இறுதிப்போட்டியிலும் ஓங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியே வெற்றிபெற்று கோப்பையை வென்றது. இதற்கு பழிதீர்க்க நியூசிலாந்து அணி தீவிரம் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. மொத்தத்தில் சம பலம் பொருந்தி காணப்படும் இவ்விரு அணிகள் மோதும் நாளைய இறுதிப்போட்டியில் அனல் பறக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: T20 world cup final tamil news kiwis faces aussie in 2021 t20 final on november 14