Advertisment

டி20 உலகக் கோப்பையில் பும்ரா? கங்குலி வைத்த சஸ்பென்ஸ்

BCCI president Ganguly breaks silence on Bumrah's availability for T20 World Cup Tamil News: டி20 உலகக் கோப்பையில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டதாக வெளியான தகவலை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
T20 World Cup; Ganguly on Bumrah's availability

BCCI president Sourav Ganguly has denied reports of Jasprit Bumrah Tamil News

BCCI president Sourav Ganguly - Jasprit Bumrah Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த தொடருக்கு முன்னதாக, இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்றுள்ளது.

Advertisment

இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கண்ணக்கில் வென்ற நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.

பும்ரா விலகல்

publive-image

இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள டி20 போட்டி தொடரிலிருந்து விலகவுள்ளார் என்றும், அவர் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். முதுகு எலும்பு முறிவு காயத்தால் அவதிப்பட்டு வரும் அவருக்கு 4-6 மாதங்களுக்கு ஓய்வு தேவை என்றும் தகவல்கள் வெளிவந்தன. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும்,, பும்ராவின் விலகல் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாகவும் கருதப்பட்டது .

சஸ்பென்ஸ் வைத்த கங்குலி

publive-image

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் இருந்து ஜஸ்பிரித் பும்ரா நீக்கப்பட்டதாக வெளியான தகவலை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மறுத்துள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கும் வீரர்கள் பட்டியலில் இன்னும் இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரெவ்ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கங்குலி, "இல்லை. பும்ரா இன்னும் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறவில்லை. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

எனக்குத் தெரியாது (அவர் ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்வாரா). இன்னும் 3-4 நாட்களில் அது தெரிந்துவிடும். அவர் நல்ல உடற்தகுதி பெறுவார் என்று நம்புகிறோம்." என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team T20 Worldcup Jasprit Bumrah Australia Sourav Ganguly
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment