IND vs NED T20 World Cup 2022 : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றனர். சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி தற்போது பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
8-வது டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 16-ந் தேதி தொடங்கியது. இதில் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடந்த 23-ந் தேதி பாகிஸ்தான் அணியடன் மோதியது. இந்த போட்டியில் 160 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கடைசி பந்தில் இலங்கை எட்டி த்ரில் வெற்றியை பெற்றது. முன்னாள் கேப்டன் விராட்கோலி 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.
இதனிடையே 3 நாட்கள் ஓய்வுக்கு பிறகு இந்திய அணி இன்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. முதல் சுற்று ஆட்டத்தில் யூ.ஏ.இ மற்றும் நமீபிய அணிகளை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள நெதர்லாந்து அணி தனது முதல் வங்கதேச அணியுடன் வெற்றியை நெருங்கி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து. தொடர்ந்து இன்று தனது 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுகிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி பேட்டிங்கில் சற்று தடுமாறியது. தொடக்க வீரர் ராகுல், கேப்டன் ரோகித், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனால் இன்றைய போட்டியில் இந்திய பேட்டிங்கில் சற்று எழுச்சி பெற வேண்டியது கட்டாயம். பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, அக்சர் பட்டேல் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.
தற்போது இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 9 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால் டிவி ரீப்ளேயில் பந்து ஸ்டெம்பை விட்டு விலகி செல்வது தெரிந்தது. ஆனால் ராகுல் ரிவ்யூ எடுக்காததால் தனது விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விராட்கோலி ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 37 பந்துகளில் அரைசதம் கடந்த கேப்டன் ரோகித் சர்மா, 39 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் ரோகித் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், வந்த வேகத்தில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனிடையே மறுமுறையில் அதிரடியாக விளையாடிய முன்னாள் கேப்டன் விராட்கோலி, 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்துள்ளது.
விராட்கோலி 44 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 62 ரன்கள் குவித்த நிலையில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் இன்னிங்ஸின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டி தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 25 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
தொடர்ந்து 180 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. தொடக்க வீரர் விக்ரம்ஜித் சிங் 9 பந்துகளில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஓடவுட் 16 ரன்களும், லீடு 16 ரன்களும், அக்கர்மன் 17 ரன்களும் கூப்பர் 9 ரன்களும் பிரின்கிள் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷமி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்திய மற்றும் நெதர்லாந்து அணி வீரர்கள் விபரம் :
இந்தியா (பிளேயிங் லெவன்): கே.எல்.ராகுல், ரோகித் சர்மா(கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
நெதர்லாந்து (பிளேயிங் லெவன்): விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீட், கொலின் அக்கர்மேன், டாம் கூப்பர், ஸ்காட் எட்வர்ட்ஸ், டிம் பிரிங்கிள், லோகன் வான் பீக், ஷாரிஸ் அகமது, ஃபிரெட் கிளாசென், பால் வான் மீகெரென்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.