டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இன்று நியூஸிலாந்து அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் இன்றைய போட்டியில் இந்திய அணியில் வீரர்கள் மாற்றம் செய்யப் படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பலரும் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு தோல்வியை வைத்து வீரர்களை மாற்றுவது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் விமர்சககர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில்ல், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏற்கனவே கூறியபடி, அணியின் சமநிலைக்காக, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, ஹரிதிக் பாண்டியா ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக எடுக்கப்பட மாட்டார் என்று முடிவு எடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக தாக்கூரை அணி வீரர்களில் உறுதியாக வைத்திருக்கிறது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இந்தியா அணியில் ஒரு கலவையாக தேர்வு செய்யப்பட்டு இடம்பெற்றனர். சுழற்பந்து வீச்சில், ரவிச்சந்திரன் அஷ்வின் அல்லது ராகுல் சாஹரை விட வருண் சக்ரவர்த்தி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதி தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஹர்திக் பாண்டியா பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார். இந்திய அணிக்கு நிகரான பாகிஸ்தான் அணியில் ஒரு போட்டியின் மூலம் அந்த வீரர்களை மாற்ற முடியாது. அணியில் விளையாடும் வீரர்களை மாற்றம் செய்வது குறித்து மறுபரிசீலனை செய்வது என்பது அணி நிர்வாகத்தின் சிந்தனை செயல்பாட்டில் நிலைத்தன்மையின்மை பற்றிய கேள்விகளை எழுப்பும். அதனால், மாற்றம் செய்யப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியாவின் உடற்தகுதி ஒரு பிரச்சினை இருக்கிறது. அவர் வலை பயிற்சியில் பந்துவீசத் தொடங்கினாலும், அவருக்கு எதிரான விர்ச்சுவல் நாக் அவுட் ஆட்டத்தில் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஓவர்களுக்கு அவரை ஒரு பந்துவீச்சாளராகப் பயன்படுத்தும் அளவுக்கு அணி நம்பிக்கையுடன் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நியூசிலாந்து. இந்திய அணி பாண்டியாவை 6வது இடத்தில் களம் இறங்கும் ஒரு ஃபினிஷராக உயர்வாக மதிப்பிடுகிறது. இவருடைய T20I ஸ்ட்ரைக்-ரேட், 143 என்பது அவருடைய பவர்-ஹிட்டிங் திறமைகளை உறுதிப்படுத்துகிறது.
தாக்கூர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசினார். அவர், ஒரு வேகப்பந்து வீச்சாளர் மட்டுமல்ல, மிகவும் திறமையான கீழ்வரிசை பேட்ஸ்மேன் ஆவார்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பவர்பிளேயில் பயன்படுத்தலாம். போட்டிக்கு முன்னதாக நடந்த வார்ம்-அப் போட்டிகளில் அவரது ஃபார்ம் சிறப்பாக இருந்தது. ஆனால், மிகச் சில அணிகளே இந்த வடிவத்தில் இரண்டு வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட வைக்கின்றன. ரவீந்திர ஜடேஜாவின் ஆல்ரவுண்டராக் இருப்பதால், அவரை அணியில் இருந்து எடுக்க முடியாது என்பதால், அஸ்வினை அணியில் விளையாடும் 11 வீரர்களில் ஒருவராக சேர்ப்பது என்பது ஆடம்பரமாக இருக்கும். ஐபிஎல் போட்டியில் லெக் ஸ்பின்னர்கள் துபாயில் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால், இந்திய அணியில், ஒரு போட்டியை வைத்து மட்டும், வருண் சக்ரவர்த்தி மீதான நம்பிக்கையை கைவிட வாய்ப்பில்லை.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரை, தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில் இடது கால் விரலில் காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இருப்பினும், லாக்கி பெர்குசன் இல்லாத நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில், குறிப்பாக கடைசியீல் கிவிஸ் உண்மையான வேகத்தைத் தவறவிட்டார். எனவே டிம் சவுதிக்கு பதிலாக ஆடம் மில்னே செர்க்கப்படலாம்.
இன்றைய போட்டியில், இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள்: ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா / ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல, நியூசிலாந்து அணியில் விளையாடும் 11 வீரர்கள்: மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன், டெவான் கான்வே, க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டிம் சீஃபர்ட், மிட்செல் சான்ட்னர், டிம் சவுதி/ஆடம் மில்னே, இஷ் சோதி, டிரென்ட் போல்ட் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.