India vs Pakistan: 2024 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.
அதன்படி, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா மற்றும் உகாண்டா ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதனை தொடர்ந்து, கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இப்போட்டியானது, அமெரிக்காவின் நியூயார்க் புறநகர் பகுதியில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மைதானத்தின் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று புதன்கிழமை திறக்கப்பட்டது. மைதானத்தின் கட்டுமான பணிகள் மூன்று மாதங்களுக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஐசிசி தலைமை நிர்வாகி ஜியோஃப் அலார்டிஸ் பேசுகையில், "ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024க்கு முன்னதாக நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
இது 34,000 கிரிக்கெட் ரசிகர்களுக்கு இடமளிக்கும் வகையில், ஸ்டேடியத்தில் பணிகள் தொடங்கப்படுவதால், மிகப்பெரிய ஐ.சி.சி போட்டிக்கு முன்னோடியாக இது ஒரு நம்பமுடியாத முக்கியமான மைல்கல் ஆகும்." என்று கூறினார்.
இங்கு என்ன மாதிரியான ஆடுகளத்தை எதிர்பார்க்கலாம்?
சமீபத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளில் ஆடுகளங்கள் முக்கிய பங்கு வகித்தன. ஷாஹீன் ஷா அஃப்ரிடி போன்றவர்கள் உதவி கிடைக்கும் போது இந்திய பேட்டர்களை தொந்தரவு செய்தனர். மேலும் உதவி இல்லாதபோது இந்திய பேட்டர்கள் அவரைத் தாக்கி அணிக்கு அதிரடியான தொடக்கம் கொடுத்தனர்.
நியூயார்க்கில், விக்கெட் ஒரு டிராப்-இன் ஆக இருக்கும். பொதுவாக, டிராப்-இன் விக்கெட்டுகள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மற்றும் நியூசிலாந்தின் ஈடன் பார்க் ஆகியவை டிராப்-இன் விக்கெட்டுகள் பயன்படுத்தப்படும் பிரபலமான மைதானங்கள் ஆகும். ஐ.சி.சி-யின் கூற்றுப் படி, புளோரிடாவில் ஆடுகளம் க்யூரேட் செய்யப்படுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: First look at New York’s 34,000-seater Nassau County International Cricket Stadium that will host India vs Pakistan clash at T20 World Cup
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“