Advertisment

IND vs PAK T20 World Cup: பிளேயிங் லெவன் முடிவு செய்து விட்டோம் - ரோகித் சர்மா

பாகிஸ்தான் போட்டிக்கான ப்ளேயிங் 11 ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்றும், அந்த ஆட்டத்தில் களமாடும் வீரர்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
T20 World Cup: Rohit sharma on ind playing 11 against pak Tamil News

T20 World Cup: India skipper Rohit Sharma said that the playing XI for the IND vs PAK match has been decided Tamil News

T20 World Cup - IND vs PAK - Rohit sharma Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளை (அக்டோபர் 16-ம் தேதி) முதல் ஆஸ்திரேலிய மண்ணில் தொடங்குகிறது. நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. மேலும், இத்தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.

Advertisment

இந்தியா vs பாகிஸ்தான்

publive-image

இந்த தொடருக்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அங்கு உள்ளூர் அணிகளுடன் பயற்சி ஆட்டத்தில் விளையாடியது. தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

இதன்பிறகு, இந்திய கிரிக்கெட் அணி அதன் முதலாவது லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் பரம எதிரான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியானது வருகிற 23 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறுகிறது. இந்தப்போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில், போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

கேப்டன் ரோகித் பேட்டி

publive-image

இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடரில் களமாடும் 16 அணிகளின் கேப்டன்களும் கூட்டாக நேற்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். இவர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் இருந்தார். இதன் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோகித், பாகிஸ்தான் போட்டிக்கான ப்ளேயிங் 11 ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்றும், அந்த ஆட்டத்தில் களமாடும் வீரர்களுக்கும் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு:-

"கடைசி நிமிட முடிவுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. எங்கள் வீரர்களுக்கு அணித் தேர்வு குறித்து முன்னதாகவே தெரிவிக்கப்படும். அதனால் அவர்கள் அதற்கேற்றாற்போல் முன்கூட்டியே தயாராகுவார்கள். பாகிஸ்தான் போட்டிக்கான எங்களது ப்ளேயிங் 11 ஏற்கனவே என்னிடம் உள்ளது. அந்த வீரர்களுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நன்றாகத் தயாராக வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியின் முக்கியத்துவம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை, நாங்கள் ஆசிய கோப்பையின் போது கூட, எங்கள் குடும்பங்களைப் பற்றி தான் பேசினோம்.

அனைத்து அணிகளும் அச்சம் இல்லாத அணிகளாக மாறிவிட்டன. அதே அணுகுமுறையை நாங்கள் பின்பற்ற விரும்புகிறோம். அப்போது 140 ரன்கள் என்பது வெற்றியின் மொத்தமாக இருந்தது, ஆனால் இப்போது அணிகள் 14-15 ஓவர்களில் அதை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

காயங்களில் நீங்கள் ஏமாற்றத்தைக் காட்ட முடியாது. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று நீங்கள் எதிர்நோக்க வேண்டும். நாங்கள் எங்கள் மற்ற இளம் வீரர்களை ஆதரித்துள்ளோம். அவர்கள்நாங்கள் எதிர்பார்ப்பதை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். நாங்கள் சீக்கிரம் இங்கு வந்து நிலைமைக்கு ஒத்துப்போக விரும்பினோம். பாகிஸ்தானுடன் விளையாடும் நேரத்தில், நாங்கள் தயாராக இருப்போம். கடைசி நிமிடத் தகவலை நாங்கள் நம்பவில்லை, கடைசி நிமிடத்தில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று யாரிடமாவது சொல்வதை நான் நம்ப விரும்பவில்லை," என்றார்.

சூர்யா எங்கள் எக்ஸ்-ஃபேக்டராக இருக்கலாம். அவரால் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர முடியும் என நம்புகிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான வீரர். அவருக்கு தற்போது தன்னம்பிக்கை மற்றும் வேகம் உள்ளது.

இவ்வாறு கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Cricket Rohit Sharma Sports Babar Azam Australia Indian Cricket T20 India Vs Pakistan Worldcup Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment