Advertisment

IND vs ENG: ஸ்டார் பேட்ஸ்மேன், ஸ்டார் பவுலர் கடைசி நேர காயம்; இங்கிலாந்து ஷாக்!

டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டி; இங்கிலாந்து அணியில் 2 முக்கிய வீரர்களுக்கு காயம்; இந்தியாவுக்கு சாதகமா?

author-image
WebDesk
New Update
IND vs ENG: ஸ்டார் பேட்ஸ்மேன், ஸ்டார் பவுலர் கடைசி நேர காயம்; இங்கிலாந்து ஷாக்!

மிக முக்கியமான டி20 உலக கோப்பை அரையிறுதிப்போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு சாதகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisment

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில், நீயூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. நாளை நடைபெறும் 2 ஆவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குள் நுழையும் முனைப்புடன் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இம்ரான் கான் முதல் பாபர் ஆசாம்; கார்னர் செய்யப்பட்ட புலி போல் ஆபத்தானது பாகிஸ்தான்

இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக அடிலெய்டு சென்றடைந்த இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பிளேயிங் 11 தேர்வு குறித்த ஆலோசனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு சற்று பிரகாசமாகியுள்ளது. காரணம் இங்கிலாந்து அணியின் ஓப்பனிங் வீரரான டேவிட் மாலன் காயம் காரணமாக விளையாடாமல் இருந்து வருகிறார். இலங்கை அணியுடனான லீக் போட்டியின் போது காயமடைந்த டேவிட் மாலன், அதன்பின்னர் களத்திற்கே வரவில்லை. தற்போதைக்கு குணமடைய முடியாத சூழலில் இருப்பதாக தெரிகிறது.

அதிரடி வீரரான டேவிட் மாலன் ஒருவேளை குணமடையவில்லை என்றால் இங்கிலாந்துக்கு ஒரே மாற்று வீரர் பிலிஃப் சால்ட் வீரர் மட்டும் தான். அனுபவம் குறைந்த வீரரான பிலிஃப் நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை. இதனால் இங்கிலாந்தின் ஓப்பனிங் அதிரடியை கட்டுப்படுத்துவது இந்தியாவுக்கு சுலபமாக அமையும் என கூறப்படுகிறது.

இந்த சிக்கல் ஒருபுறம் இருக்க, அணிக்கு மேலும் பின்னடைவாக, முக்கிய வேகப்பந்துவீச்சாளரான மார்க் வுட்-க்கும் உடல் நல பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தசைப்பிடிப்பு காரணமாக அவர் பயிற்சிக்கு கூட வரவில்லை. எனவே நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அவர் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமாக உள்ளது.

நடப்பு தொடரில் மார்க் வுட் இதுவரை 4 போட்டிகளில் 9 விக்கெட்களை கைப்பற்றி ஆபத்தான பவுலராக இருக்கிறார். இந்திய அணிக்கும் இவர் பவர் பிளேவில் அச்சுறுத்தலாக இருப்பார். இப்படிப்பட்ட சூழலில் இங்கிலாந்தின் ஸ்டார் பேட்ஸ்மேனும், ஸ்டார் பவுலரும் காயத்தால் பாதிக்கப்பட்டிருப்பது இந்திய அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India England Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment