scorecardresearch

T20 World Cup: தீபக் சாஹர் விலகல்? ஆஸ்திரேலியா பறக்கும் ஷமி, சிராஜ், தாக்கூர்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

T20 World Cup: Shami set replace Bumrah, Deepak Chahar Ruled Out Tamil News
Mohammad Shami set to be announced as Jasprit Bumrah's replacement for the T20 World Cup. Deepak Chahar ruled out due to injury, Shardul Thakur goes in the reserves Tamil News

T20 World Cup – Indian cricket team Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.

இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வரும் நிலையில், முன்னதாக, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கண்ணக்கிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை 2-1 என்ற கண்ணக்கிலும் இந்திய அணி வென்றது. மேலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2- 1 என்ற கண்ணக்கிலும் வென்றது.

டி-20 உலக கோப்பை: தீபக் சாஹர் விலகல்

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், முதல் போட்டிக்கான பயிற்சியின் போது அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் அந்தத் தொடரில் இருந்து விலகினார். மேலும் அவர் ‘சில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது’ என்று அணி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியுள்ளார். இந்தத் தொடருக்கான காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்றிருந்த அவர் காயம் முழுமையாக குணமைடையாததால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா பறக்கும் ஷமி, சிராஜ், தாக்கூர்

டி20 உலகக் கோப்பைக்காக இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்கனவே சென்றுள்ள நிலையில், அதில் காயம் காரணமாக விலகிய ஜஸ்பிரித் பும்ரா மட்டும் செல்லவில்லை. அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்கும் வீரர் பின்னர் அறிவிக்கப்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்கள் நாளை ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவார்கள் என்றும், ஜஸ்பிரித் பும்ராவின் இடத்தை ஷமி நிரப்பவுள்ளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் நீக்கப்பட்டதால், தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும், பும்ராவை மாற்றுவதற்கு முன் அனைத்து பந்துவீச்சாளர்களையும் மதிப்பீடு செய்ய நிர்வாகம் ஆர்வமாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: T20 world cup shami set replace bumrah deepak chahar ruled out tamil news