Advertisment

4 டீம்ல யாரு வேணாலும் வரலாம்: பாகிஸ்தான், வங்க தேசத்திற்கும் செமி ஃபைனல் சான்ஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.

author-image
WebDesk
New Update
4 டீம்ல யாரு வேணாலும் வரலாம்: பாகிஸ்தான், வங்க தேசத்திற்கும் செமி ஃபைனல் சான்ஸ்

டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் பி பிரிவில் பாகிஸ்தான் அணி தனது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.

Advertisment

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. இதில் இன்று சூப்பர் 12 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது. அரையிறுதி வாய்ப்பில் நீக்க இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்ற வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி டக்வெர்த் லூயிஸ் முறையில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி +1.117 என்ற ரன்ரேட்டை பெற்றுள்ளளது. இதன் மூலம் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கு உத்திரவாதம் இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேற இந்த நான்கு அணிகளும் செய்ய வேண்டும்?

இந்தியா

இந்தியா தற்போது 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆனாலும் இன்னும் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. வரும் நவம்பர் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மெல்போர்னில் நடைபெறும் ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயை வீழ்த்தினாலோ, அல்லது ஆட்டம் கைவிடப்பட்டாலோ இந்திய அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

ஜிம்பாப்வேக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்றால் 8 புள்ளிகள் பெறும். அந்த ஆட்டம் கைவிடப்பட்டால் ஒரு புள்ளிகள் பெற்று 7 புள்ளிகள் பெறும். ஆனால் பாகிஸ்தானோ அல்லது வங்கதேசமோ ஏழு புள்ளிகளைப் பெற முடியாது என்பதால், இந்தியாவுக்கு அரையிறுதிக்கு வரும். ஆனால் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்து, வங்காளதேசத்திற்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றால், மற்றும் தென்னாப்பிரிக்கா நெதர்லாந்தை வீழ்த்தினால், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னெறிவிடும்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தற்போது +1.117 ரன்ரேட் வைத்துள்ளது. ஆனால் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாவே அணியிடம் தோற்றால் அது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும். இருப்பினும் இந்திய கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தானை பின்தள்ளி விடுவார்கள். அதே சமயம் நெதர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு புள்ளிக்கு மேல் பெறாவிட்டால், பாகிஸ்தான் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற முடியும். ஏனெனில் பாகிஸ்தான் ரன்ரேட் தென்ஆப்பிரிக்காவுக்கு நிகராக உள்ளது.

நிச்சயமாக, வங்கதேசத்திற்கும் வாய்ப்பு உள்ளதா?

வங்கதேச அணி தனது கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும், பின்னர் நெதர்லாந்திற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியடைய வேண்டும். அவ்வாறு தோல்வியடைந்தால் ரன்ரேட்டில் கீழே இருந்தாலும் புள்ளிகள் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.

தென்ஆப்பிரிக்காவின் வாய்ப்பு

நெதர்லாந்தை தோற்கடித்தால் தென்ஆப்பிரிக்க அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். இன்றைய போட்டியில பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்காவின் தோல்வியை சந்திக்காத அணி என்ற சாதனையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cricket T20 Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment