பாகிஸ்தானின் ரோகித் சர்மா; கவனம் ஈர்க்கும் அதிரடி வீரர் ஹைதர் அலி!

Pakistan’s young cricketer Haider ali Tamil News: பாகிஸ்தானின் ரோகித் சர்மா என வர்ணிக்கப்படும் அதிரடி ஆட்டக்காரர் ‘ஹைதர் அலி’ நடப்பு டி 20 உலகக் கோப்பை தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வீரராக வலம் வருவார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

T20 World Cup Tamil News: all about Pakistan’s Rohit Sharma haider ali

T20 World Cup Tamil News: 7வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வரும் நிலையில் வரும் 24ம் தேதி முதல் ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் தொடங்கும். இந்த சுற்றுக்கு தரவரிசையில் ‘டாப்-8’ இடங்களை பிடித்த இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் சுற்றில் தகுதி பெறும் 4 அணிகள் இந்த அணிகளுடன் இணையும்.

டி 20 உலகக் கோப்பை அரங்கில் ஜொலிக்க போகும் வீரர் யார்?

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளும், வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்துவர். அந்த வகையில் டி 20 கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ள டேவிட் மாலன், பாபர் ஆஸம், விராட் கோலி போன்ற முன்னணி வீரர்கள் தங்களது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்தியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் போன்ற உள்நாட்டு விளையாட்டுகளில் அதிரடி காட்டிய இளம் வீரர்களும் உலகக் கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளதால் அவர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் ஈர்ப்பார்கள்.

இதில் இந்தியாவின் இஷான் கிஷன், பாகிஸ்தானின் ஹைதர் அலி, தென்னாப்பிரிக்காவின் தப்ரைஸ் ஷம்ஸி, மற்றும் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா ஜசாய் ஆகிய வீரர்கள் தங்களின் தனித்துவமான ஆட்டத்தில் வெளிப்படுத்துவர் என கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக பாகிஸ்தானின் ரோகித் சர்மா என வர்ணிக்கப்படும் அதிரடி ஆட்டக்காரர் ஹைதர் அலி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வீரராக வலம் வருவார் என்றும் தெரிவிக்கின்றனர்.

அதிரடியை தொடர்வாரா ஹைதர் அலி?

பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரராக உருவெடுத்துள்ள ஹைதர் அலி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த அணிக்காக அறிமுகமாகினார். இதுவரை 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 42 ரன்களும், 15 டி20 போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் 2 அரைசதங்களுடன் 256 ரன்களும் குவித்துள்ளார். மேலும், தனது முதல் அரைசதத்தை இங்கிலாந்து அணிக்கெதிரான அறிமுக ஆட்டத்தில் பதிவு செய்து, பாகிஸ்தான் அணியில் அறிமுக போட்டியிலே முதல் அரைசத்தை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தொடர்ந்து அவர் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றார். இருப்பினும், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான பெஷாவர் ஸல்மி அணியில் இடம்பிடித்திருந்த ஹைதர் அலி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டு நடந்த போட்டியின் போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதற்காக அந்த தொடரில் இருந்தும், இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

கடந்த மாதம் பாகிஸ்தானின் கேப்டன் பாபர் அசாமின் மத்திய பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வடக்கு அணிக்காக களமிறங்கிய ஹைதர் அலி 53 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து மீண்டும் பாகிஸ்தான் தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது டி- 20 உலகக் கோப்பை அணியில் தனக்கான இருக்கையை உறுதி செய்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் அவர், தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

டி- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரும் 24ம் தேதி பலப்பரீட்சை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: T20 world cup tamil news all about pakistans rohit sharma haider ali

Next Story
ஐபிஎல் 2017: பிளேஆஃப் சுற்று கெஸ்ஸிங்…..
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com