கொரோனா பரவலின் தாக்கத்தால், சுகாதாரப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி திங்களன்று பி.டி.ஐ-யிடம் தெரிவித்தார். இந்த தகவலால், பல வாரங்களாக இந்த மெகா நிகழ்வைச் சுற்றி வெளிவந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளது.
"டி 20 உலகக் கோப்பையை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்ற முடியும் என்று நாங்கள் ஐ.சி.சி.க்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம். கூடுதல் விவரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன, ” என்று கங்குலி கூறினார்.
"இந்த நிகழ்வில் பங்குபெறும் அனைவரின் சுகாதார பாதுகாப்பு கவலைகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது," என்று கங்குலி கூறினார்.
இருப்பினும், உலக கோப்பை போட்டிகளை நடத்தும் பொறுப்பில் பி.சி.சி.ஐ இருக்கும்.
போட்டியின் தொடக்க தேதியாக அக்டோபர் 17 இறுதி செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்டதற்கு, “சில நாட்களில் பயண விவரங்களை நாங்கள் இறுதி செய்ய முடியும். அக்டோபர் 17ல் போட்டி தொடங்குவது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ” என்று கங்குலி கூறினார்.
ஐ.சி.சி அமைப்பு இன்னும் போட்டிகளுக்கான இறுதி அட்டவணையை முடிவு செய்யவில்லை என்பதை ஐ.சி.சி செய்தித் தொடர்பாளரும் உறுதிப்படுத்தினார்.
நாட்டின் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு இந்தியாவால் உலக கோப்பை டி20 போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியுமா என்பதை முடிவு செய்ய ஐ.சி.சி, இந்த மாத தொடக்கத்தில், பி.சி.சி.ஐ.க்கு நான்கு வார கால அவகாசத்தை வழங்கியது.
உலக கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்படலாம் என பி.டி.ஐ முதன்முதலில் மே 4 அன்று செய்தி வெளியிட்டது.
இந்தியாவில் அதிகரித்த கொரோனா பரவலின் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடைபெறுகிறது.
சுகாதார பாதுகாப்பு காரணங்களால், ஒன்பது நகரங்களில் 16 நாடுகளின் போட்டியை நடத்துவது இந்தியாவுக்கு கடினமாக இருக்கும் என்பது முன்னரே முடிவுக்கு வந்தது.
உண்மையில், துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபியில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான தயாரிப்புகளையும் பயண ஏற்பாடுகளையும் ஐ.சி.சி ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.
தகுதிச் சுற்று போட்டிகள் மஸ்கட்டில் நடைபெறலாம், இது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பிட்சுகளுக்கு அக்டோபர் 15 வரை நடக்கவுள்ள ஐபிஎல் போட்டிகளின் மீதமுள்ள 31 ஆட்டங்கள் நடைபெற்ற பின்னர் புத்துணர்ச்சி அளிக்க சிறந்த நேரத்தை வழங்கும்.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டவுடன், டி 20 உலகக் கோப்பையும் அங்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. உலக கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ள நேரத்தில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலையின் தாக்கம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இந்த மாற்றம் முன்னரே எதிர்ப்பார்க்கப்பட்டது.
அத்தியாவசிய மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையால் ஏப்ரல்-மே மாதங்களில் இந்தியா இரண்டாவது அலைகளால் பேரழிவிற்கு ஆளானது. அப்போதைய நெருக்கடியின் உச்சத்தில் தினசரி 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகின.
செப்டம்பர் மாதத்தில் பிசிசிஐ எட்டு அணிகள் கொண்ட ஐபிஎல்லை நடத்த முடியாவிட்டால், அது ஒரு மாதத்திற்குள் உலக கோப்பை டி 20 போட்டிகளை எவ்வாறு நடத்த முடியும்? இப்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் ஒரு புதிய மாறுபாடு டெல்டா 3 பரவி வருகிறது. மேலும், அக்டோபரில் நாட்டில் மூன்றாவது அலை வருவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன.
"பி.;சி.சி.ஐ அமைப்பு உலக கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்துவது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை நன்கு அறிந்திருந்தது," என்று பெயர் வெளியிட விரும்பாத ஐ.சி.சி வாரிய உறுப்பினர் ஒருவர் பி.டி.ஐயிடம் தெரிவித்தார்.
மேலும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பயணப் பட்டியலில் இந்தியா ‘சிவப்பு பட்டியலில்’ உள்ளது, அதற்குள் விதிகள் தளர்த்தப்படாவிட்டால் பயணம் செய்வது ஒரு பிரச்சினையாக இருக்கலாம்.
இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதற்கு முன், பல உயிர் பாதுகாப்பு வளைய மீறல்கள் நிகழ்ந்ததை அடுத்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் விளையாடுவதில் பெரும்பாலான உறுப்பு நாடுகளுக்கு வசதியாக இருக்கும் என்பதும் புரிந்து கொள்ளப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 2020ல் ஐபிஎல் போட்டிகள் ஒரு இறுக்கமான உயிர் பாதுகாப்பு வளைய சூழலுடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மும்பை, அகமதாபாத் மற்றும் புனே ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் போட்டிகளை நடத்த முடியுமா என்றும் இறுதி போட்டிகளை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த முடியுமா என்றும் பி.சி.சி.ஐ. ஆலோசனை செய்தது. ஆனால் அந்த முன்னணியில் பல சிக்கல்கள் இருந்தன.
"மும்பை அல்லது புனேவில் பாகிஸ்தான் விளையாடுவது எப்போதுமே ஒரு பிரச்சினையாக இருந்துள்ளது. இதுபோல பல காரணிகள் இருந்தன. ஐ.பி.எல் இல், பல வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர், எனவே நீங்கள் நல்ல மாற்றீடுகளைக் கொண்டிருக்கலாம்.
“அதுவும் பலவீனமான அணிகளைப் பற்றி கருத்தில் கொள்ளும்போது, அவர்கள் ஐந்து அல்லது ஆறு சிறந்த வீரர்களை இழந்தால் என்ன செய்வது? அவர்களிடம் தயாராக மாற்றீடுகள் இருக்காது ”என்று ஐ.சி.சி வட்டாரங்கள் நியாயப்படுத்தியது.
இந்திய அணி, தனது டி 20 வீரர்களுடன், ஐபிஎல்லில் விளையாட ஒரு தனி விமானத்தில் செப்டம்பர் 15 ம் தேதி மான்செஸ்டரிலிருந்து துபாய் சென்றடையும்.
இந்திய அணி டி 20 உலகக் கோப்பை முடிவடையும் நவம்பர் இரண்டாவது வாரம் வரை இரண்டு மாதங்களுக்கு மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி இருக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.