News about Rishabh Pant, Urvashi Rautela in tamil: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக வலம் வருபவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் கீப்பிங் திறனால் இந்திய அணி தனி முத்திரை பதித்து வருகிறார். தற்போது இவர் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கும் 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த தினங்களுக்கு முன் மும்பையில் இருந்து ஆஸ்திரேலிய பறந்த இந்திய வீரர்களுடன் இவரும் சென்றார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இன்று பெர்த்தில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி தரப்பில் சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்தார். அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதன் பிறகு பிரிஸ்பேனுக்குச் செல்லும் இந்திய அணி அங்கு முறையே அக்டோபர் 17 மற்றும் அக்டோபர் 19 ஆம் தேதிகளில் தி கபாவில் அதிகாரப்பூர்வ டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது
நடப்பு டி-20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
பண்டை துரத்தும் ஊர்வசி

இந்நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா, ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா வந்துள்ளார். ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டுடன் உரசலில் இருக்கும் அவர் தற்போது ஆஸ்திரேலியா வந்து இறங்கியுள்ளது சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊர்வசி ரவுடேலா, ஆஸ்திரேலியா பறக்கும் விமானத்தில் இருந்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார். மேலும் அவரது இன்ஸ்டா பதிவில், தனது இதயத்தைப் பின்தொடர்ந்ததாகவும், அது அவரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவிற்கு ஊர்வசியின் ரசிகர்கள் லைக்ஸ் போட்டுக்கொண்டிருக்கும் அதே வேளையில், இணைய வாசிகள் பலர் கமெண்டுகளை தட்டி வருகின்றனர். ஒரு இணையவாசி தனது கமெண்டில், “ரிஷப்பைப் பின்தொடர்வதை நிறுத்துங்கள்!” என்று கூறியுள்ளார். மற்றொருவரோ, “அவர் ரிஷப்பை விட மாட்டார்” என்றுள்ளார். மூன்றாவது நபரோ, “நீங்கள் உண்மையிலேயே ரிஷப்பை ஆஸ்திரேலியாவுக்குப் பின்தொடர்ந்திருக்கிறீர்களா?” என்று வினவிருக்கிறார்.
முன்னதாக, அக்டோபர் 4 ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய ரிஷப் பண்ட்டிற்கு ஊர்வசி ரவுடேலா ஒரு மறைமுக பிறந்தநாள் வாழ்த்தை அனுப்பியிருந்தார். “பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என்று ஊர்வசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அவரின் வாழ்த்தில் ரிஷப் பெயரை குறிப்பாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரைப் பின்தொடர்பவர்கள் ரிஷப் தான் அதன் பொருள் என்று சுட்டிக்காட்டி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil