Advertisment

T20 World Cup: அதிக முறை பட்டம் வென்ற அணி எது? முழு பட்டியலை இங்க பாருங்க!

Complete List of T20 World Cup Winners from 2007 to 2022 tamil news: டி-20 உலக கோப்பையை அதிகமுறை வென்ற அணிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது அணியாக உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
T20 World Cup Winners List from 2007 to 2022, Champions List in tamil

T20 World Cup 2022

T20 World Cup | T20 World Cup Winners List form 2007 to 2022 | ஐசிசி டி20 உலகக் கோப்பை  |  2007 முதல் 2022 வரையிலான டி20 உலகக் கோப்பை வெற்றியாளர்களின் பட்டியல்: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இந்த தொடருக்காக இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், அங்கு உள்ளூர் அணிகளுடன் பயற்சி ஆட்டத்தில் விளையாடி, தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisment

டி20 உலகக் கோப்பை - அதிக முறை பட்டம் வென்ற அணி

publive-image

பொதுவாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் இந்த டி20 உலகக் கோப்பை போட்டிகள், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு டி20 உலகக் கோப்பை போட்டி கூட நடைபெறவில்லை. அதாவது, 2016 ஆம் ஆண்டுக்கு பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்படவில்லை.

கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில், 2020 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தொடர் கடந்த ஆண்டு இறுதியில் தான் நடத்தப்பட்டது. தற்போது 2022 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியான உள்ளது. தொடரை அதிகமுறை கைப்பற்றிய அணிகளில் 2 முறை கோப்பை முத்தமிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது அணியாக இருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் தலா ஒருமுறை கோப்பையை வென்ற அணிகளாக உள்ளன.

2007 முதல் 2022 வரையிலான டி20 உலகக் கோப்பை வெற்றியாளர்கள் பட்டியல் (T20 World Cup Winners List from 2007 to 2022)

ஆண்டு வெற்றியாளர்
2007 இந்தியா
2009 பாகிஸ்தான்
2010 இங்கிலாந்து
2012 வெஸ்ட் இண்டீஸ்
2014 இலங்கை
2016 வெஸ்ட் இண்டீஸ்
2021 ஆஸ்திரேலியா
2022 -

டி20 உலகக் கோப்பை வென்ற அணிகளின் பட்டியல் (T20 World Cup Winners List)

தற்போது, 2007 முதல் 2022 வரையிலான டி20 உலகக் கோப்பை வென்ற அணிகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

2007 டி20 உலகக் கோப்பை - இந்தியா (T20 World Cup 2007 Winner- India)

டி20 உலகக் கோப்பையை முதலில் வென்ற அணியாக இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனி தலையியலான இளம் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முன்னதாக நடந்த சூப்பர் 8 சுற்றில் ல் நியூசிலாந்துக்கு எதிராக மட்டும் இந்திய அணி (ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே) தோல்வியடைந்து இருந்தது.

டி20 உலகக் கோப்பை 2009 - பாகிஸ்தான் (T20 World Cup 2009 Winners- Pakistan)

publive-image

2009 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து மண்ணில் நடந்தது. முதல் டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை வந்த பாகிஸ்தான் அணி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. போட்டியை நடத்திய இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருந்தது. முன்னர் நடந்த சூப்பர் 8 போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்திலும், இலங்கைக்கு எதிராக ஒரு போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. எனினும், இறுதிப் போட்டியில் நுழைந்திருந்த பாகிஸ்தான் அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் அதன் முதல் சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.

டி20 உலகக் கோப்பை 2010 - இங்கிலாந்து (T20 World Cup 2010 Winner- England)

publive-image

2010 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் ஆசியரல்லாத அணி என்ற பெருமையை இங்கிலாந்து அணி பெற்றது. இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அதன் ஆஷஸ் போட்டியாளரான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்து இருந்தது. ஆனால், அடுத்த நடந்த அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அந்த அணி கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

டி20 உலகக் கோப்பை 2012 - வெஸ்ட் இண்டீஸ் (T20 World Cup 2012 Winner- West Indies)

2012 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அதன் முதல் போட்டியில் தோல்வியடைந்து இருந்தது. எனினும், தொடர் வெற்றிகளை குவித்த அந்த அணி, இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

டி20 உலகக் கோப்பை 2014 வெற்றியாளர் - இலங்கை (T20 World Cup 2016 Winner- Sri Lanka)

2014 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிகள் வங்க தேசத்தில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நுழைந்ததிருந்த முன்னாள் சாம்பியனான இந்தியாவை தோற்கடித்த இலங்கை அணி முதல் முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணி லீக் சுற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும், தொடர்ந்து நடந்த ஆட்டங்களில் வெற்றியை ருசித்து, உலக கோப்பையை முத்தமிட்டது.

டி20 உலகக் கோப்பை 2016 - வெஸ்ட் இண்டீஸ் (T20 World Cup 2016 Winner- West Indies)

2016 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை போட்டிகள் இந்திய மண்ணில் நடந்தது. கொல்கத்தாவின் ஈடன் கார்டான் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது முறையாக டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத்வைட்டின் அபார ஆட்டம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பித்துள்ளது.

இந்த தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, மற்ற எல்லா ஆட்டங்களிலும் வென்று கோப்பையை முத்தமிட்டது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

England Sports Cricket Indian Cricket Team T20 Indian Cricket Worldcup Pakistan West Indies Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment