Advertisment

முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்: இன் ஸ்விங்கருக்கு பலியான பாபர் அசாம்

இந்திய இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசிய இன் ஸ்விங் பந்தை சந்தித்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் எல்பிடபிள்யூ ஆகி பூஜ்ஜிய ரன்னில் வெளியேறினார்.

author-image
WebDesk
New Update
Arshdeep Singh to Babar Azam, out Lbw Tamil News

IND vs PAK  T20 World Cup 2022

IND vs PAK  T20 World Cup 2022: Babar Azam - Arshdeep Singh Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தானை மெல்போர்னில் எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டிக்காக இரு அணியினரும் மெல்போர்னில் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

Advertisment

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

முதல் பந்திலேயே பெரிய மீனை தூக்கிய அர்ஷ்தீப் சிங்

publive-image

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி களமிறங்கினர். முதலாவது ஓவரை இந்திய வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்குமார் வீசினார். இரண்டாவது ஓவரை இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அவரின் முதல் பந்தை கேப்டன் பாபர் சந்தித்தார். அர்ஷ்தீப் சிங் வீசிய இன் ஸ்விங் பந்து அவரை ஆட்டமிழக்க செய்தது.

தொடர்ந்து அர்ஷ்தீப் சிங் வீசிய 3.6 ஓவரில் முகமது ரிஸ்வான் புவனேஷ்வர் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்கள் இப்படி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளது அந்த அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup India Vs Pakistan Babar Azam Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment