Devendra Pandey - தேவேந்திர பாண்டே
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் 8வது டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) டி20 அணிக்கு எதிரான எதிர்கால நடவடிக்கையை தீர்மானிக்கும் முன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியவுடன் டிராவிட் மற்றும் இரு வீரர்களையும் கேட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். "நாங்கள் ஒரு கூட்டத்தை அழைத்து எங்கள் டி20 அணிக்கான வரைபடத்தைப் பற்றி விவாதிப்போம். நாங்கள் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க விரும்பவில்லை. அணி நிர்வாகமும் வீரர்களும் தங்கள் பார்வையை முதலில் முன்வைக்கட்டும்; அதை எப்படி செய்வது என்று வாரியம் பின்னர் முடிவு செய்யும்."என்று அந்த அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் இருந்து இந்தியா பாதியில் வெளியேறிய நிலையில், அணியின் டி20 தத்துவத்தை மறுதொடக்கம் செய்வதற்கு ஆதரவான வாதங்கள் மற்றும் அணியை மாற்றியமைத்தல் போன்றவை வேகம் எடுத்துள்ளன. டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் சராசரி வயது 30.6 ஆக இருந்தது. இது போட்டியில் அவர்களைப் பழைய அணிகளில் ஒன்றாக ஆக்கியது. 37 வயதில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் மூத்த வீரராக இருந்தார். அத்துடன் ரோஹித் சர்மா (35), விராட் கோலி (33), ஆர் அஷ்வின் (36), சூர்யகுமார் யாதவ் (32), புவனேஷ்வர் குமார் (32) ஆகியோர் 30 வயதுக்கு மேல் இருந்தனர்.
அடுத்த டி20 உலகக் கோப்பை 2024-ல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கவுள்ள நிலையில், இந்த வீரர்களில் சிலர் தொடர்ந்து அணியில் இருப்பார்கள் என்பது சாத்தியமில்லை. எனவே, சுமூகமான மாற்றத்தை உறுதி செய்வதே அணி நிர்வாகத்திற்கும் தேர்வாளர்களுக்கும் சவாலாக இருக்கும்.
அடுத்த வாரம் நியூசிலாந்தில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா, குறுகிய வடிவத்தில் அடுத்த இந்திய கேப்டனாக வருவார். ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் கட்டவிழ்த்துவிட்ட தாக்குதலுக்கு இந்தியா - நட்சத்திரங்கள் நிறைந்த வரிசை இருந்தபோதிலும், இங்கிலாந்துக்கு எதிராக அரையிறுதியில் சண்டையிடுவதற்கு எதிர்பார்த்த ஒரே வீரர் பாண்டியா மட்டுமே.
இந்தப் போட்டிக்குப் பிறகு, வயதான இந்திய வீரர்கள் மற்றும் அவர்கள் அடுத்த டி20 உலகக் கோப்பை சுழற்சிக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பார்களா என்று டிராவிட்டிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர், "சரி, அரையிறுதி ஆட்டத்திற்குப் பிறகு அதைப் பற்றி இப்போது பேசுவது மிக விரைவில்" என்று டிராவிட் பதிலளித்தார். “இந்தப வீரர்கள் எங்களுக்காக அற்புதமான கலைஞர்களாக இருந்திருக்கிறார்கள். அதைப் பற்றி சிந்திக்க நமக்கு இரண்டு வருடங்கள் உள்ளன. இங்கே சில நல்ல தரமான வீரர்கள் உள்ளனர். எனவே இதைப் பற்றி பேசவோ அல்லது இதைப் பற்றி இப்போது சிந்திக்கவோ இது சரியான நேரம் அல்ல. எங்களிடம் போதுமான விளையாட்டுகள் இருக்கும். நாங்கள் முன்னேறும்போது போதுமான போட்டிகள் இருக்கும். மேலும் இந்தியா முயற்சி செய்து அடுத்த உலகக் கோப்பைக்கு தயாராகும்." என்று கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், தெரிவுக்குழுவில் சில புதிய முகங்கள் இடம்பெறலாம் எனத் தெரியவருகிறது. இந்த கமிட்டியில் தற்போது முன்னாள் இந்திய சர்வதேச வீரர் சேத்தன் ஷர்மா தலைவராக உள்ளார் மற்றும் சுனில் ஜோஷி, ஹர்விந்தர் சிங் மற்றும் தேபாஷிஷ் மொஹந்தி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 10 மாதங்களாக வெஸ்ட் ஜோன் தேர்வாளர் பதவி காலியாக இருந்தும், பிசிசிஐ இன்னும் ஒருவரை நியமிக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.