Advertisment

நட்சத்திர வீரர்கள் மீதான குருட்டு நம்பிக்கை… தோல்வியில் பாடம் கற்குமா இந்தியா?

டாப் ஆடரில் விளையாடும் வீரர்கள் மீதான இந்த எல்லையற்ற நம்பிக்கையே, அடுத்தடுத்து ஐ.சி.சி நடந்ததும் ஒயிட்-பால் போட்டிகளின் முடிவில் இந்தியாவை பின்தங்க வைத்துள்ளது.

author-image
WebDesk
New Update
Blind faith in star power holds India back at World Cups Tamil News

This infinite trust in the top guns is what holds India back at the business end of successive white-ball ICC tournaments, despite making it to the semifinals or finals almost every time. But no lessons seem to be learnt. (AP)

Tushar Bhaduri - துஷார் பாதுரி

Advertisment

இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர்கள் என்ற பலத்தில் உயிர்வாழ்கிறது. இங்குள்ள மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் ஜாம்பாவான்களாகவும், பாதி - கடவுள்களாகவும் போற்றப்படுகின்றனர். அவர்கள் களத்தில் சிறப்பாக செயல்படும் போது, ​​அவர்களால் ஒரு போட்டியை வெல்ல முடியும் என்று கூறப்படுகிறது. அவர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது, ​​ஒரு பெரிய போட்டியில் வெற்றிபெறும் நேரத்தில் அவர்கள் மீண்டு வருவார்கள் என்று நம்பப்படுகிறது.

டாப் ஆடரில் விளையாடும் வீரர்கள் மீதான இந்த எல்லையற்ற நம்பிக்கையே, அடுத்தடுத்து ஐ.சி.சி நடந்ததும் ஒயிட்-பால் போட்டிகளின் முடிவில் இந்தியாவை பின்தங்க வைத்துள்ளது. இந்த அணி ஒவ்வொரு முறையும் அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளுக்குச் சென்றாலும், எந்த பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

இதே பேட்டிங் வரிசை நேற்று வியாழக்கிழமை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் விளையாடியது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரும் ஒரே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக கேப்டன் ரோகித் சொற்ப ரன்னில் அவுட் ஆனார். வங்க தேசம் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிராக மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய மற்றொரு தொடக்க வீரர் ராகுல் மீண்டும் மண்ணை கவ்வினார்.

இந்த போட்டியில் உலக கிரிக்கெட்டின் கவனத்தை ஈர்த்த கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே ரன் மேக்கிங் ஃபார்மில் இருந்தனர். ஹர்திக் பாண்டியா அரையிறுதியில் எந்த பயனும் இல்லாமல் முன்னேறம் காட்டினார். ஆனால் அப்போதும் கூட, ஜிம்பாப்வே, வங்க தேசம் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக இந்தியா எடுத்த அதிகபட்ச ஸ்கோர்கள் 186 ஆகும்.

டாப்-ஆர்டரில் மாற்றம் இல்லை

இந்திய இன்னிங்ஸின் ஆரம்பம், ஏறக்குறைய ஒவ்வொரு போட்டியிலும், தற்போதைய டி20 தரநிலைகளின்படி நடைபாதையாக இருந்தது. ஆனால், டாப் ஆர்டரில் சாத்தியமான மாற்றம் குறித்து எந்த சிந்தனையும் கொடுக்கப்படவில்லை. அணி அமைப்பு பற்றிய ஒரே விவாதம், தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் வேண்டுமா என்பதுதான். டாப் ஆடரில் விளையாடும் 4 வீரர்களின் பெயரும் கல்லில் பொறிக்கப்பட்டது போல் மாற்றம் காணாமல் இருந்தது. அவர்கள் சரியான நேரத்தில் கர்ஜிப்பார்கள் என்று நம்பப்பட்டது. அதனால் தான் லீக் சுற்றில் மந்தமாக ஆடுகிறார்கள். அதிரடி காட்ட சிறிது நேரம் ஆகும் என்றும் கூறப்பட்டது.

publive-image

ஆனால், இந்திய கிரிக்கெட் இப்படித்தான் செயல்படுகிறது. ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக பெரிய நாக் அவுட் விளையாட்டுகளில் அந்த எண்ணம் சரியாக வேலை செய்யாவிட்டாலும், பெரிய போட்டிகளின் போது தங்களுக்கு இன்னும் பெரிய பெயரை உருவாக்குவது பெரிய பெயர்களைப் பொறுத்து தான் உள்ளது. கோலியும் பாண்டியாவும் இங்கிலாந்துக்கு எதிராக அரைசதங்கள் அடித்தனர். பின்னர் ஸ்லாக் ஓவர்களில் ஓவர் டிரைவ் செய்தனர். ஆனால், இரண்டாவது இன்னிங்சில் போட்டியின் ஸ்லாக் ஓவர்களுக்குள் நுழைய விடாமல் செய்த ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் முன்னிலையில் மொத்த ஸ்கோரும் போதாது என்று அப்பட்டமாக வெளிப்பட்டது.

இது இங்கிலாந்து விஷயத்தில் இல்லை. ஹேல்ஸ் மற்றும் பட்லர் அடித்து ஆடவில்லை என்றால், பென் ஸ்டோக்ஸ், அல்லது மொயீன் அலி, அல்லது லியாம் லிவிங்ஸ்டோன் ஆகிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை பதம் பார்த்திருப்பார்கள். இவர்கள் கோலி போல் இல்லை என்றாலும், ஒரு யூனிட்டாக அதிக சக்தி வாய்ந்தவர்கள்.

கோலி மற்றும் யாதவ் போட்டி முழுவதும் ரன் குவிப்பு அட்டவணைகள் மற்றும் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தினர். ஆனால், தொடரின் இறுதிப்போட்டியில் இருவரும் இடம்பெற மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமை களமிறங்கும் போட்டியின் முதல் 10 ஸ்கோரர்களில் பட்லர் மற்றும் ஹேல்ஸ் மட்டுமே பேட்ஸ்மேன்கள். கிரிக்கெட் ஒரு காரணத்திற்காக ஒரு குழு விளையாட்டு என்று அழைக்கப்படுகிறது.

டிஃபன்சிவ் மனப்பான்மை

பழைமைவாதம் என்பது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டு பக்கங்களிலும் ஒரு அம்சமாக இருந்தது. இந்தியா 170 ரன்களுக்கு மேல் எதிரணிக்கு எதிராக எதையும் இலக்காகக் கொண்டதாகத் தெரியவில்லை. தொடக்கத்தில் பந்துவீசியவர்களிடம் இருந்து எந்த உதவியும் இல்லை என்பதால் அணியின் பந்துவீச்சு வரிசை போராடியது. யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரண்டு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு இந்தியா ஒயிட்-பால் கிரிக்கெட்டில் டெம்ப்ளேட்டை மாற்றி நீண்ட காலம் ஆகவில்லை. இதில் குல்தீப் அதிர்ஷ்டத்தில் சரிவுக்குப் பிறகு திரும்பி வரத் தொடங்கினார். சாஹல் டி20 உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்க போதுமானதாகக் கருதப்பட்டார். ஆனால், அவர் பெஞ்சை சூடேற்றவும், அணி வீரர்களுடன் நேர்காணல் செய்யவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டார். சமீப காலமாக, இந்தியா சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்குதலை விட ரன் சேமிக்கும் கருவியாக பயன்படுத்தி வருகிறார்கள்.

IND vs ENG, T20 World CUP

அதிக தாக்குதல் சுழல்-பந்து வீச்சு விருப்பத்தை சேர்க்க தயக்கம். இதன் விளைவாக இந்தியா பிட்ச் நிலைமைகளுக்கு பணயக்கைதியாக இருந்தது. எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. புவனேஷ்வர் குமார் நீண்ட காலமாக புதிய வெள்ளைப் பந்தைக் கொண்டு, நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிக்கிக்கொண்டார். ஆனால் அவரது ஒப்பீட்டளவில் வேகம் இல்லாததால் பெரிய போட்டிகளில் அவரைக் கணித்து விட்டனர். அர்ஷ்தீப் சிங் நிறைய நம்பிக்கையை அளித்தார். ஆனால் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இருந்திருந்தால் அவருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

ரவிச்சந்திரன் அஷ்வின் இந்தியா அணிக்கு திரும்பினார். ஆனால் இந்த உலகக் கோப்பையில் அவரது மிகப்பெரிய பங்களிப்பு பந்தினால் அல்ல, பேட்டிங்கில் அல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் கடைசி ஓவரில் லெக் சைடில் வைட் டவுன் அடித்ததில் கிடைத்தது.

மேலும் அக்சர் படேலை விளையாடும் லெவன் அணியில் சேர்ப்பது பந்தில் ஊடுருவுவதை விட வரிசையின் சில பேட்டிங் ஆழத்துடன் தொடர்புடையது. குறிப்பாக இடது கை சுழற்பந்து வீச்சாளர் உதவாத சூழ்நிலையில் தனது முழு ஒதுக்கீட்டையும் பந்துவீசுவதை நம்ப முடியாது.

இந்தியாவின் வெளியேற்றத்திற்குப் பிறகு, டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய மாதங்களில் இந்தியாவின் தயாரிப்பு, பரிசோதனை மற்றும் அணுகுமுறையை நோக்கி நிறைய விரல்கள் சுட்டிக்காட்டப்படும். அதேபோல், ஆஸ்திரேலியாவில் தங்களிடம் இருந்த வீரர்களை இந்தியா அதிகம் பயன்படுத்தியதா என்ற கேள்வியும் கேட்க வேண்டும்.

உலகளாவிய ஒயிட்-பால் போட்டிகளின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு இறுதிக் கட்டத்தை எட்டாமல் தொடர்ந்து வரும் நியூசிலாந்துடன் இணையாக இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் சுற்றுச்சூழல், வீரர்களின் வளங்களைப் பொறுத்த வரையில் இரு நாடுகளுக்கும் இடையே எந்த ஒப்பீடும் இல்லை. நியூசிலாந்து அணியினர் அவர்களின் பல்வேறு கட்டுப்பாடுகளை தொடர்ந்து மிகைப்படுத்துகிறது. இந்தியாவைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Virat Kohli Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Kl Rahul Hardik Pandya T20 Indian Cricket Worldcup Suryakumar Yadav Yuzvendra Chahal Kuldeep Yadav
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment