scorecardresearch

ஷாகின் ஷா அப்ரிடி… அபாயகரமான பாக். பவுலருக்கு டிப்ஸ் கொடுத்த ஷமி- வீடியோ

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு பவுலிங் டிப்ஸ் கொடுத்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Cricket news in tamil: Mohammed Shami gives bowling tips Shaheen Shah Afridi
Mohammed Shami gives bowling tips Shaheen Shah Afridi video goes viral Tamil News

Mohammed Shami – Shaheen Shah Afridi Tamil News: 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்த டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று விட்டது. நேரடியாக சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி, அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியானது வருகிற 23 ம் தேதி நடக்கவுள்ளது.

டி-20 உலக கோப்பை: இந்திய அணியில் ஷமி

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக முகமது ஷமி இருந்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் காத்திருப்பு வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டதால், அவரது இடத்தில் ஷமி சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய மண்ணில் அதிக விளையாடிய அனுபவம் கொண்ட அவர் தனது அனுபவத்துடன் புவனேஷ்வர் குமார் போன்ற முன்னணி வீரர்களுடன் இணைந்து வேகத்தாக்குதல் தொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயிற்சி ஆட்டத்தில் மிரட்டிய ஷமி

இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் 187 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்த ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். மேலும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கின் உதவுடன் ஒரு ரன்-அவுட்டும் செய்து அசத்தினர். அவரின் இந்த அற்புத ஃபார்ம் இந்திய அணியின் பந்துவீச்சு வரிசைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.

பாகிஸ்தான் வீரருக்கு பவுலிங் டிப்ஸ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்கு முன்னதாக பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர் முகமது ஷமி பாகிஸ்தான் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடிக்கு பவுலிங் டிப்ஸ் கொடுத்தார். அப்போது அவர்கள் இருவரும் பேசிய கொண்டது வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஷமிக்கு இருக்கும் அனுபவத்தை கருத்தில் கொண்டு, இந்திய அணி மட்டும் அவரைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளது. மேலும், அணியின் இளம் வீரர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் உதவுகிறது. ஆனால், ஷமி போன்ற வேகப்பந்து வீச்சாளரிடமிருந்து கற்றுக்கொள்ள ஷாஹீன் போன்ற பாகிஸ்தான் சீமர்களும் கூட ஆர்வமாக உள்ளனர்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஷஹீனுடன் சில டிப்ஸ்களை பகிர்ந்து கொண்ட ஷமி இடது கை பந்துவீச்சாளராகவே மாறினார். இரு அணிகளுக்கிடையேயான போட்டி மற்றும் சில நாட்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடுவார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷமி பாகிஸ்தான் வீரருக்கு உதவியதைக் கருத்தில் கொண்டு இந்த தருணம் சமூக ஊடகங்களில் பல ரசிகர்களின் இதயங்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Cricket news in tamil mohammed shami gives bowling tips shaheen shah afridi