T20 WC: செமி ஃபைனலில் படுதோல்வி… மனம் உடைந்து கண்ணீர் விட்ட கேப்டன் ரோகித் – வீடியோ!

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் இந்தியா படுதோல்வியடைந்த நிலையில், கேப்டன் ரோகித் மனம் உடைந்து கண்ணீர் விட்ட வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Cricket video Tamil News: Rohit Sharma in tears after Ind loss to Eng
Rohit Sharma in tears after India lose to England. (Screengrab/Hotstar)

T20 World Cup – Rohit Sharma Tamil News: 8-வது டி-20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரின் முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் நேற்று அடிலெய்டு ஓவலில் அரங்கேறிய 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்திடம் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த அபார வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மனம் உடைந்து கண்ணீர் விட்ட கேப்டன் ரோகித்

நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த முறை லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்தியாவுக்கு படுதோல்வி தான் எஞ்சியது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதும் இந்திய வீரர்கள் மிகுந்த சோகத்தில் காணப்பட்டனர். குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மிகுந்த வருத்தத்துடன் இருந்தார். அவர் கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றது. இதை கண்ட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரோகித்தின் முதுகில் தட்டி கொடுத்து அவருக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் வீடியோவாக பதிவிடப்பட்ட நிலையில், அந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest T20worldcup news download Indian Express Tamil App.

Web Title: Cricket video tamil news rohit sharma in tears after ind loss to eng

Exit mobile version