Advertisment

ENG vs PAK Live Streaming: இங்கிலாந்து vs பாகிஸ்தான் இறுதிப் போட்டியை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

மெல்போர்ன் நகரில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
England vs Pakistan {ENG vs PAK} T20 world cup Final match 2022 Live Streaming

டி20 இறுதிப் போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் 137 ரன்கள் எடுத்துள்ளது.

England vs Pakistan {ENG vs PAK} T20 world cup Final match 2022 Live Streaming | இங்கிலாந்து vs பாகிஸ்தான் {ENG vs PAK} டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி  2022 நேரடிஒளிபரப்பு: மூன்று வாரங்கள், 44 போட்டிகள் என விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த 8வது டி20 உலகக் கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 13) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறும் இந்த தொடருக்கான இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டிகாக இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisment

இந்நிலையில், பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளில் களமாட வாய்ப்புள்ள உத்தே வீரர்கள், மெல்போர்ன் நகரின் வானிலை முன்னறிவிப்பு, லைவ் ஸ்ட்ரீமிங் மற்றும் நேரடி ஒளிபரப்பு விவரங்களை இங்கு வழங்கியுள்ளோம்.

என்ன: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி

publive-image

எங்கே: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

எப்போது: மதியம் 1:30 (IST) ஞாயிறு, 13 நவம்பர். ரிசர்வ் நாள்: 9:30 PM (IST) திங்கள், 13 நவம்பர்.

அணிகள்: பாகிஸ்தான் vs இங்கிலாந்து

பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மகத்தான வெற்றியைப் பெற்றதன்மூலம் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தனர். சூப்பர் 12 சுற்றில் இரு அணிகளும் அந்தந்த குழுக்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருந்தன. ஒரு கட்டத்தில் அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவது சாத்தியமில்லை என்றும் கூறப்பட்டது.

publive-image

ஆனால், அதைத் தவிடுபொடியாக்கி இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. 2009ல் இங்கிலாந்தும், 2010ல் பாகிஸ்தானும் என தலா ஒருமுறை டி20 உலகக் கோப்பையை இரு அணிகளும் முத்தமிட்டுள்ளன. இதில் இரண்டாவது முறையாக எந்த அணி வாகை சூடும் என்பது நாளை நடைபெறும் ஆட்டத்தில் தெரிந்துவிடும். இதற்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

PAK vs ENG இறுதிப் போட்டி: மெல்போர்ன் வானிலை முன்னறிவிப்பு

நாளை நடக்கவிருக்கும் இறுதிப்போட்டிக்கு வருணபகவான் வழிவிடுவாரா என்பது பலத்த கேள்விக்குறியாகி இருக்கிறது. மெல்போர்ன் நகரில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.

இறுதிப்போட்டிக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) வசதி உண்டு. அதாவது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த நாளில் (திங்கட்கிழமை) போட்டி நடத்தப்படும். ஆனால் இரண்டு நாட்களும் மழை காரணமாக ஆட்டம் நடத்த முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.

PAK vs ENG இறுதிப்போட்டி: இரு அணி உத்தேச வீரர்கள் பட்டியல்:

பாகிஸ்தான்:

publive-image

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் ஆசம் (கேப்டன்), முகமது நவாஸ், முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அப்ரிடி

இங்கிலாந்து:

publive-image

ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), அலெக்ஸ் ஹேல்ஸ், பிலிப் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், மொயீன் அலி, சாம் குர்ரன், கிறிஸ் ஜோர்டான், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித்

PAK vs ENG இறுதிப்போட்டி: நேரலை ஸ்ட்ரீமிங் மற்றும் நேரலை ஒளிபரப்பு

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நேரலையில் ஒளிபரப்புகிறது. டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் இணையதளத்தில் போட்டி நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

England Sports Cricket T20 Worldcup Pakistan Australia England Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment